என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கவன ஈர்ப்பு மாநாடு
  X

  கவன ஈர்ப்பு மாநாடு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கவன ஈர்ப்பு மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
  • இந்த மாநாட்டில் அனைத்து சமூக மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு பாசிசத்திற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,

  திருச்சி:

  மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளருமான ப.அப்துல் சமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பாசிச அரசியலை வேரறுப்போம் என்கிற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு திருச்சி புத்தூர் நால்ரோட்டில் இன்று (25-ந்தேதி, சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது.

  இந்த மாநாட்டிற்கு அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர் மௌலானா காஜா முயினுத்தீன் பாகவி தலைமை தாங்குகிறார். மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜிவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு,

  தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில தலைவர் இரா.முத்தரசன், சு.வெங்கடசேன் எம்.பி., சசிகாந்த் செந்தில், திருவடிக்குடில் சுவாமிகள், ஜெகத் கஸ்பார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.

  இந்த மாநாட்டில் அனைத்து சமூக மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டு பாசிசத்திற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

  Next Story
  ×