search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடையை மீறி நடை பயணம் சென்ற  148 பேர் கைது
    X

    தடையை மீறி நடை பயணம் சென்ற 148 பேர் கைது

    • தடையை மீறி நடை பயணம் சென்ற 148 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்யக்கோரி

    திருச்சி:

    நீண்ட காலம் சிறையில் இருக்கும் ஆயுள் சிறை கைதிகளை விடுதலை செய்யக்கோரி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் திருச்சியில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி நடைபெறும் தொடக்க நிகழ்வு திருச்சி பாலக்கரை பகுதியில் நடந்தது.

    நடை பயணத்துக்கு கட்சியின் தலைவர் கே.எம்.சரிப் தலைமை தாங்கினார்.செ. ஹைதர் அலி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக ஹைதர் அலி, விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன் ,தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன், தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் அரங்க குணசேகரன், மக்கள் புரட்சி கழகம் தலைவர் அன்சர் மில்லத், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் துணைத் தலைவர் சண்முகராஜா, இணையதள பொறுப்பாளர் சரிப் ராஸிக், புதுக்கோட்டை மண்டல செயலாளர் யூசுப் ராஜா, திருச்சிமாவட்ட செயலாளர் ராயல் சித்திக், ரபீக் ராஜா, மேற்கு தொகுதி செயலாளர் முகமது தாஹா ,துணைச் செயலாளர் கம்பரசம் பேட்டை காஜா, கே.டி. எஸ்.பீர் சாகுல், எஸ்.எம். முஸ்தபா மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். இந்த நடை பயணத்துக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடைப்பயணம் தொடங்கிய சில மணித்துளிகளில் கட்சியின் தலைவர் சரீப் உள்ளிட்ட 148 பேரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து வேனில் ஏத்தி சென்றனர். முன்னதாக போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    Next Story
    ×