search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா நாளை நடக்கிறது
    X

    ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் கொடைவிழா நாளை நடக்கிறது

    • ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் கொடை விழா கடந்த 17- ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • கொடை விழாவினை முன்னிட்டு நாள்தோறும் வில்லிசை, கரகாட்டம், கும்பாட்டம், கொம்புதப்பு மற்றும் மேள தாளத்துடன் கூடிய கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    நெல்லை:

    தென்மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வடக்கு விஜயநாராயணத்தில் ஒத்தப்பனை சுடலைமாடசாமி கோவில் கொடை விழா இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆனி மாதத்தில் பக்தர்களால் விமரிசையாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான கொடை விழா கடந்த 17- ந்தேதி கால்நாட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில், இன்று மாலை சுவாமிக்கு மாக்காப்பு சாத்துதலும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வான நாளை(வெள்ளிக்கிழமை) பிரதான கொடை விழா மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. மதியம் மனோன்மணீஸ்வரர் சிவன்கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து, மேளதாளம், வானவேடிக்கை முழங்க ஊர்வலமாக வருதல் நடக்கிறது.

    தொடர்ந்து சுவாமிக்கு பாலாபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அன்று இரவில் பிரம்மாண்டமான படப்புடன் கூடிய சாமக்கொடையும், கண்கவர் வானவேடிக்கையும் கோலாகலமாக நடக்கிறது.

    நள்ளிரவு வழிபாடுகளை தொடர்ந்து மறுநாள் (சனிக்கிழமை) காலை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதலான கிடா வெட்டுதலுடன் கூடிய வழிபாடுகள் நடைபெறுகிறது.

    கொடை விழாவினை முன்னிட்டு நாள்தோறும் வில்லிசை, கரகாட்டம், கும்பாட்டம், கொம்புதப்பு மற்றும் மேள தாளத்துடன் கூடிய கிராமிய கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.

    கொடை விழாவினை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர், தூத்துக்குடி, சாத்தான்குளம், திசையன்விளை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

    கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் நடராஜன், ஆய்வாளர் கார்த்திகேஸ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஷ்வரி, கொடை விழா குழு உறுப்பினர்கள் சிவக்குமார், மணிகண்டன், செந்தூர்பாண்டியன், சங்கரலிங்கம் மற்றும் விழாக்குழுவினர், பக்தர்கள், ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×