என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  டெல்லி பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
  X

  முதல்வர் ஸ்டாலின்

  டெல்லி பயணம் முடிந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் உள்ள மரபு தானியங்களின் தொகுப்பு அடங்கிய பெட்டகத்தை பிரதமருக்கு வழங்கினார்.
  • டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை வந்தடைந்தார்.

  சென்னை:

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நள்ளிரவு டெல்லி சென்றார். இன்று காலை 10.30 மணியளவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரைச் சந்தித்து புதிதாகத் தோவு செய்யப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முா்முவை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

  இதையடுத்து, மாலை 4 மணியளவில் புதுடெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்கு வந்த பிரதமருக்கு நேரில் நன்றி தெரிவித்தார். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

  நீட் விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

  இந்நிலையில் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்பினார்.

  Next Story
  ×