என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடுமலை அரசு கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடமிருந்து 15,507 மூட்டை  கொப்பரை கொள்முதல்
  X

  கோப்புபடம். 

  உடுமலை அரசு கொள்முதல் மையத்தில் விவசாயிகளிடமிருந்து 15,507 மூட்டை கொப்பரை கொள்முதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்று வருகிறது.
  • உரிய தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

  உடுமலை,ஜூலை.3-

  தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அரசு கொப்பரை கொள்முதல் மையம் துவக்கப்பட்டது.கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல்விவசாயிகளிடமிருந்து கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 31ந்தேதி வரை கொள்முதல் மையத்தில் 554 விவசாயிகளிடமிருந்து 15 ஆயிரத்து, 507 மூட்டை (775.350 டன்) கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக கொப்பரைக்கான தொகை 8 கோடியே 21 லட்சத்து 9 ஆயிரத்து 565 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

  வெளி மார்க்கெட்டில் கொப்பரைக்கான விலையும் மிகவும் குறைந்து ஒரு கிலோ 80 ரூபாய்க்கு மட்டுமே விற்று வருகிறது.இதனால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களில் கொண்டு வந்து, உற்பத்தி செய்த கொப்பரையை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வரத்து அதிகரித்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், கொப்பரை கொள்முதல் மையத்தில் வருகிற 31ந் தேதி வரை விவசாயிகளிடமிருந்து, நேரடியாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கு உரிய தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றனர்.

  Next Story
  ×