search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி
    X

    கோப்புபடம்.

    பல்லடம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி

    • பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை ஒன்று உள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(வயது 47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    மேலும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×