search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை குழி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    நாட்டறம்பள்ளி அருகே குப்பை குழி அமைக்கும் பணிக்காக சென்ற ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்.

    குப்பை குழி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    • பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே குப்பைகுழி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஜேசிபி இயந்திரம் முற்றுகையிட்டனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஒன்றிய ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் காந்திநகர் பகுதியில் குப்பைகுழி அமைப்பதற்கு ஊராட்சி மன்ற சார்பில் நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான பணிகள் துவங்க பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டது இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் அவ்விடத்தில் திரண்டனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 50 க்கும் மேற்பட்ட வீடுகள் வசித்து வரும் நிலையில் இப்பகுதியில் குப்பைகுழி அமைத்தால் துர்நாற்றம் வீசும் என்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து குப்பைகளை இங்கு கொண்டு மலைப் போல் குவித்து அதனை தீயிட்டு கொளுத்துவார்கள்.

    இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கும் மேலும் துர் நாற்றம் வீசும் என்று கூறி குப்பை குழி அமைப்பதற்கு வந்த ஜேசிபி இயந்திரத்தை அப்பகுதி பொது மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து குப்பை குழி அமைக்கவும் பணி மேற்கொள்ள அப்பகுதியில் இருந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இப்பகுதியில் குப்பை குழி அமைக்கப்படாது என்று கூறியதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×