search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு
    X

    யூனியன் சேர்மன் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் உலக மகளிர் தின விழா நடைபெற்ற காட்சி.  

    தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்பு

    • தூத்துக்குடி யூனியன் ஆணையாளராக ஹெலன் பொன்மணி நியமிக்கப்பட்டார்,
    • நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர் தலைமை வகித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வந்த நாகராஜன் ஆழ்வார் திருநகரிக்கும், ராமராஜ் ஓட்டப்பிடாரம் யூனிய னுக்கும் மாற்றப்பட்டனர்.

    இதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அதிகாரிகளாக பணியாற்றி வந்த ஹெலன் பொன்மணி தூத்துக்குடி யூனியன் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். வசந்தா தூத்துக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவல ராக (கிராம ஊராட்சி )நியமிக்கப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருவரும் தங்கள் பொறுப்பு களை ஏற்றுக் கொண்டனர்.அவர்களுக்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர், துணை சேர்மன் ஆஸ்கர் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அதிகாரிகள் அலுவலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    பின்னர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது,

    நிகழ்ச்சிக்கு யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர் தலைமை வகித்தார். ணையாளர் ஹெலன் பொன்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா, துணை சேர்மன் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி, தனுஷ் பாலன் கலந்து கொண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி காலத்தில் பெண்களுக்கு சொத்துரிமை பங்கு வழங்கப்பட்டது.

    உள்ளாட்சியில் பெண் களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது உள்ளிட்ட தி.மு.க. ஆட்சிக்கால சாதனைகளை எடுத்துக் கூறி வாழ்த்துரை வழங்கி னார். விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ( ஊராட்சிகள்), முத்து லட்சுமி, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கச்செல்வி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, சத்துணவு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சுதர்சன், ஆனந்தி, முத்துமாலை, தொம்மை சேவியர், ஜெயகணபதி, மரிய செல்வி, முத்துக்குமார், முத்துலட்சுமி, செல்வபார்வதி, நர்மதா, அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    Next Story
    ×