search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபட வேண்டும்
    X

    வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் தி.மு.க.வினர் முழுமையாக ஈடுபட வேண்டும்

    • அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
    • நவம்பர் மாதம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    வேங்கிக்கால்:

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அக்டோபர் 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தம் செய்யவும், நீக்கவும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்காக நவம்பர் மாதம் 4,5,18,19 ஆகிய 4 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களை பயன்படுத்தி விடுபட்ட வாக்காளர் பெயர்களை சேர்த்தல், 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    17 வயது நிரம்பியவர்களும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 18 வயது நிரம்பும் போது வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி புதிய வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்குதல், இடம் பெயர்ந்து தொகுதிக்குள் வந்துள்ள வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்து வெளியில் சென்றுள்ளவர்களை பட்டியலில் இருந்து நீக்குதல் உள்ளிட்ட பணிகளில் தி.மு.க. நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×