என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் படுத்துள்ளார்.
    • மோப்பநாய் கொலை நடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு அங்குள்ள கல்லறை மேட்டு பகுதியில் போய் நின்று விட்டது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு (வயது 65). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சூசை இறந்து விட்டார்.

    இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் திருச்சியில் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

    மகள் அருகே உள்ள கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். மூதாட்டி ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    அந்தப் பகுதியில் நெருக்கடியாக வீடுகள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு குழந்தை தெரசு வீட்டில் படுத்து உறங்கினார்.

    பின்னர் புழுக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்பு உள்ள தாழ்வாரத்தில் படுத்துள்ளார்.

    பின்னர் அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நள்ளிரவு மர்மநபர்கள் மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை கொலை செய்தனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயின், இரண்டு தோடு மற்றும் ஒரு மூக்குத்தி ஆகிய மூன்று பவுன் நகைகளை திருடி சென்றனர்.

    இன்னொரு மூக்குத்தி அவரது மூக்கில் உள்ளது.

    மூதாட்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது பற்றி வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    மோப்பநாய் கொலை நடந்த பகுதியில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு அங்குள்ள கல்லறை மேட்டு பகுதியில் போய் நின்று விட்டது.

    இந்த சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் சம்பவ இடத்தை பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.

    கொலை செய்யப்பட்ட மூதாட்டி உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. நகைக்காக மூதாட்டி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

      திருச்சி:

      தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமில்லாமல் கூட்டணி ஆட்சி என்பதற்கு இடம் அளிக்காத வகையில் வரும் தேர்தலில் திமுகவை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்வார்கள் என்று திருச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ம.தி.மு.க. பொது ச்செயலாளர் வைகோ திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      தி.மு.க. கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ளோம்.

      கொள்கை அடிப்படையில்தான் தி.மு.க. கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

      தி.மு.க. கூட்டணிக்கு பெரிய வாக்கு வங்கி உள்ளது. ம.தி.மு.க.வும் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் சக்தியாக உள்ளது. தி.மு.க. வெற்றி பெற ம.தி.மு.க. தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் நாங்கள் கூட்டணியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

      செப்டம்பரில் திருச்சியில் நடக்க உள்ள அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிலும் இதனை நான் பிரகனடப்படுத்துவேன்.

      கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் அந்த கூட்டணி ஆட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் திமுகவை அறுதி பெரும்பான்மை பெற செய்து வாக்காளர்கள் வெற்றி பெற செய்வார்கள் அதையும் அமித்ஷா நிச்சயம் பார்ப்பார்.

      மல்லை சத்யா கடந்த நான்கு ஆண்டுகளாக கட்சிக்கு விசுவாசமாக இல்லை. அவர் குறித்து எந்த கருத்தும் நான் கூற விரும்பவில்லை என்றார்.

      • கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
      • தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்.

      திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

      * தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை.

      * கூட்டணி ஆட்சியை நான் விரும்பவில்லை, அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

      * தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 2026-ம் ஆண்டிலும் ஆட்சியை தொடர்ந்து நடத்துவார்.

      * தி.மு.க. அறுதி பெரும்பான்மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சி பற்றிய பேச்சு எழாது.

      * தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்பதாக எழுந்த செய்திகள் அனைத்தும் பொய்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார்.
      • ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம்.

      ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

      அரசியலில் தவறு நடப்பது இயல்பு தான். செய்த தவறை (அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக்கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக் காலத்தில் ம.தி.மு.க. வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப்படுத்தி பேசவில்லை.

      மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவெடுப்பார். தி.மு.க.வில் தற்போது சேர்க்கப்பட்டவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும் 11 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம். அதற்கு குறைந்தபட்சம் 10, 12 தொகுதிகளில் போட்டியிட்டு, 8 தொகுதியில் வெற்றி பெற்றால்தான் அங்கீகாரம் கிடைக்கும். இதுதான் எங்களது கட்சியினர் விருப்பம்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      பேட்டியின்போது, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் உடனிருந்தனர்.

      • மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.
      • வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.

      கே.கே.நகர்:

      ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி யாக ம.தி.மு.க. விளங்குகிறது என்பதை எடுத்துரைக்கும் வகையில் செப்டம்பரில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது.

      அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தது தவறானது என்பதை வைகோ வெளிப்படையாக கூறி உள்ளார். அதற்காக அ.தி.மு.க. தீண்டகூடாத கட்சி அல்ல. எம்.ஜி.ஆரையோ ஜெயலலிதாவையோ அவர் இழிவுபடுத்தி எதுவும் கருத்து கூறவில்லை.

      மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு எடுக்கும்.

      ம.தி.மு.க. வின் தொண்டர்களையோ நிர்வாகிகளையோ தி.மு.க.வில் சேர்க்கவில்லை.

      ம.தி.மு.க.வில் இன்னும் சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். தலைமைக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வேறு சில இயக்கங்களில் இணையலாம். அது அவர்களின் உரிமை.

      கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு எடுப்பார்.

      ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் காலி நாற்காலிகளை படம் எடுத்த பத்திரிக்கையாளர்களை அடிக்க வேண்டும் என வைகோ கூறவில்லை.

      வைகோ கோபப்படுவதால் அவர் இழந்தது தான் அதிகம். கோபப்பட்டாலும் அவர் நல்ல மனிதர்.

      பொடா சட்டம் வந்த பொழுது வைகோ அதை ஏற்றுக்கொள்ள கூடாது என பாராளுமன்றத்தில் பேசினார். பொடாவில் பத்திரிக்கை துறையினரையும் கைது செய்யலாம் என இருந்தது அதை மட்டுமாவது நீக்க வேண்டும் என பேசியவர் வைகோ.

      கூட்டணியில் 12 இடங்கள் வேண்டும் என ம.தி.மு.க. எங்கும் கேட்கவில்லை, எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டணி தலைமையுடன் பேசி தேர்தல் நேரத்தில் தலைவர் முடிவெடுப்பார்.

      இவ்வாறு அவர் தெரிவித்தார்.

      • 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
      • விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.

      திருச்சி:

      கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மோதியது. இந்த கோர விபத்தில் மாணவி சாருமதி (16), மாணவர்கள் விமலேஷ் (10), செழியன் (15) ஆகிய 3 பேர் பலியாகினர்.

      கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

      இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

      இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

      இந்த குழுவினர் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

      இதனிடையே விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்த கேட் கீப்பர், லோகோ பைலட், கடலூர், ஆலம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பணியாற்றி வரும் முதுநிலை உதவி லோகோ பைலட், ரெயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரெயில் நிலைய 2 மேலாளர்கள், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், ரெயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

      விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரிடம் இன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.

      இவர்களிடம் தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர்.

      விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. காலையில் 5 பேர் ஆஜராகி இருந்தனர். மீதமுள்ள 6 பேரும் இன்று மாலைக்குள் ஆஜராவார்கள் எனவும், ரெயில்வே துறை சார்ந்தவர்கள் மீது தவறுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனர். 

      • மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.
      • மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும்.

      திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

      * இளம் மாணவர்களை சந்திக்கும்போது எனக்கு உற்சாகம் பிறந்து விடுகிறது.

      * கல்லூரி நட்பு எப்போதும் தொடர வேண்டும். அது சமூகத்திலும் எதிரொலிக்கப்பட வேண்டும்.

      * கல்விதான் ஒருவரின் நிலையான சொத்து.

      * மாணவர்களுக்கு அரசியல் புரிதல் என்பது அவசியம்.

      * மாணவர்கள் சமூக அக்கறை கொண்டவர்களாக வளர வேண்டும்.

      * கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது.

      * காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என நமக்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன.

      * நான் அரசியல் பேசவில்லை, மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்றுதான் பேசுகிறேன்.

      * ஓரணியில் திரண்டால் தமிழகத்தை யாராலும் வெல்ல முடியாது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
      • திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

      திருச்சி:

      ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன்ரோடு, கிழக்கு உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி,

      வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு சித்திரைவீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரைவீதி, அடையவளஞ்சான் தெருக்கள், திருவானைக்காவல் பகுதி சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார்டன், ராகவேந்திராகார்டன், காந்திரோடு,

      டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை ஜம்புகேஸ்வரர்நகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

      இந்த தகவலை செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

      • ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் பல லட்சத்தை இழந்ததாக தெரிகிறது.
      • ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      திருச்சி:

      திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

      இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் ஏற்பட்டது. இதில் பல லட்சத்தை அவர் இழந்ததாக தெரிகிறது.

      இதனால் நெருக்கடிக்கு ஆளான கிஷோர் குமார் யாரும் எதிர்பாராத வகையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

      பின்னர் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கிஷோர் குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் ஜனனி கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
      • பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

      திருச்சி:

      திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

      எனவே அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலக்கல் கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டு, அரியமங்கலம் தொழிற்பேட்டை, சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

      • இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
      • நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.

      திருச்சி:

      முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. சி.டி.ஏ.ஜெயசீலன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

      இந்தியாவிலேயே முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

      இந்த முகாமின் மூலம் நூற்றுக்கணக்கான ஓய்வுதாரர்களுக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவையில் இருந்த ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் இது போன்ற ஓய்வு முகாம்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

      இன்று மாலைக்குள் 6 ஆயிரம் ஓய்வூதியதாரர்களின் குறைகள் தீர்க்கும் தீர்க்கப்படும். இந்தியா முழுவதும் மாவட்ட அளவில் 206 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்றைக்கு நமக்கான ஆயுத தளவாடங்களை நாமே தயாரித்துக் கொள்ள முடிகிறது.

      ஒரு காரிடார் உத்தரபிரதேசத்திலும் 2-வது தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூரில் டிபன்ஸ் காரிடார் உருவாக்கப்படுகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவ தளவாடங்களை நாமே உற்பத்தி செய்து கொள்கிறோம். பல்வேறு நாட்களாக விடுக்கப்பட்ட கோரிக்கையான ஒரே பதவி ஒரே ஊதியம் திட்டத்தை பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. முப்படைகளுக்குமான முதன்மை அதிகாரி பதவி உருவாக்கப்பட்டது. நவீன சாதனங்களை உருவாக்க வேண்டும் என ஆண்டு தோறும் பட்ஜெட்டில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் 25 சதவீத நிதி ஒதுக்கப்படுகிறது.

      நம்முடைய நம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சுமார் 5,000 மீட்டர் உயரத்தில் பறக்க கூடிய ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
      • வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது.

      துவாக்குடி:

      திருச்சியில் பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

      காங்கிரஸ் அரசாங்கம் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்ட போது ஜனநாயகத்தின் குரல்வளை எப்படி எல்லாம் நெறிக்கப்பட்டது. தமிழகம் எந்த அளவு பாதிக்கப்பட்டது என்பதை எடுத்து கூறும் வகையில் இந்த விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெறுகிறது. இந்த நெருக்கடி கால கட்டத்தில் தமிழகத்தில் டில்லி பாபு, கேரளா ராஜா என பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

      இப்படிப்பட்ட காங்கிரஸ் உடன்தான் தற்பொழுது தி.மு.க. கூட்டணி வைத்து உள்ளது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகளில் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி ஏற்ற பிறகு பொருளாதாரத்தின் 11-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.

      ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்து பாகிஸ்தான் 700 டிரோன்களை இந்தியா மீது ஏவியது. அதில் ஒரு டிரோன் மட்டுமே இந்திய எல்லையில் வந்து விழுந்தது. அதுவும் வெடிக்கவில்லை மற்ற டிரோன்கள் வானிலே தகர்க்கப்பட்டது. இனி குழந்தைகளுக்கு கூட சீனாவில் தயாரிக்கப்படும் ஏரோப்ளேன் பொம்மையை வாங்க மாட்டார்கள்.

      இந்தியாவில் 550 டிரோன் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது. இதில் 100 நிறுவனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் உள்ளது. அதேபோல் இந்தியாவில் தேவையான ஆயுதங்கள் இருப்பதுடன் வெளிநாட்டிற்கும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

      நமது நாட்டில் ராணுவத்தில் ஆகாஷ், பிரமோத் ஆகிய ஏவுகணைகள் உள்ளது. இது 200 கிலோ மீட்டர் தாண்டி உள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடியது. 78 கோடி பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு காப்பீடு வசதி பெறுகின்றனர்.

      தமிழகத்தில் போலீசார் கஞ்சா வழக்கு போடுகின்றனர். ஆனால் இதுவரை ஒரு கிராம் கூட சிந்தடிக் ட்ரக் பயன்படுத்தியதாக எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்தியாவில் அதிகமான அளவில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாநிலமாக பஞ்சாப் தான் இருந்தது. தற்பொழுது தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

      தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பிரிவதற்கு வாய்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி எங்கு உள்ளது என்று பிரச்சனை இல்லை. அவர்கள் யார் அதிகம் தருகிறார்களோ அங்கு சென்று விடுவார்கள். வைகோ அதிக சீட்டு கேட்டார் என்பதற்காக அவரது கட்சியை தி.மு.க உடைக்க தொடங்கியுள்ளது. ம.தி.மு.க. பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட்டவரை தற்பொழுது தனது கட்சியில் சேர்த்துள்ளது.

      பா.ம.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு பி.ஜே.பி. தான் காரணம் என செல்வ பெருந்தகை கூறியது பக்கத்து வீட்டு ஜன்னலை எட்டிப் பார்ப்பது போன்றது. அப்படியொரு கேவலமான செயலை அவர் செய்துள்ளார்.

      இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

      ×