என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கிறிஸ்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் சீமான்
    X

    கிறிஸ்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தும் சீமான்

    • சீமான் திருச்சி சமயபுரத்தில் கள் இறக்க அனுமதி கோரி பனைமரம் ஏறி போராட்டம் நடத்தினார்.
    • தேனியில் கால்நடைகளுக்காக பேசுவேன் என்று ஆடு, மாடுகளுடன் மாநாடு, அதன் பின்னர் மரங்கள் மாநாடு நடத்தினார்.

    திருச்சி:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ பெருமக்களுடன் கலந்துரையாடும் சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    உலக தமிழ் கிறிஸ்தவ இயக்கம் ஏற்பாடு செய்து உ ள்ள இந்த நிகழ்ச்சியில் சீமான் கிறிஸ்தவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். ஏற்கனவே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் இஸ்லாமிய அமைப்பினர் ஏற்பாடு செய்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது தங்களை சிறுபான்மையினர் என ஏன் அழைக்கிறார்கள் என பலரும் எழுப்பிய கேள்விக்கு அவரது பாணியில் புதிய விளக்கம் அளித்திருந்தார். ஏற்கனவே சீமான் திருச்சி சமயபுரத்தில் கள் இறக்க அனுமதி கோரி பனைமரம் ஏறி போராட்டம் நடத்தினார். அதன் பின்னர், தேனியில் கால்நடைகளுக்காக பேசுவேன் என்று ஆடு, மாடுகளுடன் மாநாடு, அதன் பின்னர் மரங்கள் மாநாடு நடத்தினார்.

    இதன் மூலம் மக்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பும் முயற்சியில் சீமான் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×