search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையத்தின் முன்பகுதி மேலும் அழகுபடுத்தப்படுகிறது
    X

    சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையத்தின் முன்பகுதி மேலும் அழகுபடுத்தப்படுகிறது

    • புதிய முனையத்தில் சோதனை முறையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • புதிய ஒருங்கிணைந்த முனையத்தை அழகுப்படுத்தும் பணி சுமார் 2 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கி ணைந்த விமான முனையம் உலகத்தரத்தில் நவீன முறையில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய முனையத்தில் சோதனை முறையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    புதிய ஒருங்கிணைந்த விமான நிலையத்தின் வெளிப்பகுதியில் கூடுதலாக இடங்கள் உள்ளன. இதனை மேலும் அழகுப்படுத்த விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி புதிய விமான முனையத்தின் முன் பகுதியில் பசுமையான செடிகள், நடைபாதைகள் அமைக்கும் பணி, செல்பி மையம், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தற்பொழுது இயங்கி வரும் பழைய உள்நாட்டு முனையத்தின் ஒரு பகுதி மூடப்பட்டு புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் மூலமாக அந்த சேவைகள் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஒரு சில மாதங்களில் பழைய சர்வதேச விமான முனையம் முற்றிலுமாக இடிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தை அழகுப்படுத்தும் பணி சுமார் 2 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முன்பகுதியை மேலும் அழகுபடுத்தும் பணி நடந்து வருகிறது. விமான பயணிகள் மற்றும் பார்வை யாளர்களுக்கு உணவுக் கூடம், பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் காத்திருப்பதற்கு இருக்கைகள், பார்வையா ளர்களை கவரும் வகையில் கலைப் பொருட்கள், வண்ண மயமான விளக்குகள், வண்ண விளக்குகளுடன் நடைபாதைகள், விமான நிலைய தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையப்படும் என்றார்.

    Next Story
    ×