என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • பாலிசிதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.
    • சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவின் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக த மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். விழாவில் அஞ்சல் துறையால் முழுமையாக பயன்பெறும் இரண்டு ஊராட்சிகளின் தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் கடந்த மாதத்தில் 26,126 சேமிப்பு கணக்குகளும், 8899 பேருக்கு ஆதார் சேவையும், 454 ஜிஏஜி பாலிசிகளும், 4576 ஐபிபிபி கணக்குகளும், 326 பேருக்கு மிண்ணனு உயிர் வாழ் சான்றிதழும், 5400 பேருக்கு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆதார் மூலம் பண பரிவர்த்தனையும், ஆயுள் காப்பீட்டில் 2961 பாலிசிதாரர்கள் மூலம் புதிய பாலிசிக்கான பிரிமீயம் தொகை ரூ.1 கோடியே 34 லட்சத்து 55 ஆயிரத்து 552 -ம் , 2412 பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கணக்குகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களும் கவுரவிக்கப்பட்டார்கள்.

    தூய்மை இயக்கம் 3.0 அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் பரிசு வழங்கி சிறப்பிக்கபட்டனர். முடிவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலக முதுநிலை அஞ்சல் அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளி யின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமின் நிறைவு விழா சுவாமிநாதசாமி கோவிலில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன கிருஷ்ணன் தலைமை ஏற்று நடத்தினார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் லயன் மாணிக்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஷபானா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் குணாளன், பாலலெட்சுமி தொடக்கப்ப ள்ளி தாளாளர் பாலசுப்ர மணியன், சுவாமிமலை கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலையை வடிவமைத்த தேவ ராதாகிருஷ்ணன் ஸ்தபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் பிரபாகரன் மற்றும் உதவி திட்ட அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் மாணவன் ராஜா நன்றி கூறினார்.

    • 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் மேல விசலூர் நாகரசம்பேட்டை வாய்க்கால் சீரமைக்கப்பட்டு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்காக குழி தோண்டிய போது, மேலவிசலூர் தெற்கு தெருவை சேர்ந்த செல்வமணி என்பவர் வீட்டின் பின்புறம் 1/2 அடி உயர ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.

    இதுகுறித்து செல்வமணி விசலூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் பூமா ஆகியோர் சிலையை பார்வையிட்டனர்.

    பின்னர், பொதுமக்கள் முன்னி லையில் சிலை அவர்களிடம் ஒப்படை க்கப்பட்டது.

    • நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டார்.
    • நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையத்தை ஆய்வு செய்தார்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கை துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போத பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021, 22,23 ஆகிய 3 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் ராஜகிரி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.

    ஆய்வின் போது உடன் முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோகர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன் ,சரவணன், ராஜகிரி ஊராட்சி மன்ற சமீமா பர்வீன்ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மத்திய மாவட்ட மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (மத்திய), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கி விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோ ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், கோட்டை பகுதி புண்ணியமூர்த்தி,

    கரந்தை பகுதி பஞ்சு, தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் நாகராஜன், மருத்துவக்கல்லூரி பகுதி மனோகர், கீழவாசல் பகுதி சதீஷ்குமார், தெற்கு ஒன்றியம் ஸ்டாலின் செல்வராஜ், 5-வது வட்ட செயலாளர் சம்பத், மருத்துவக்கல்லூரி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பசுபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, அம்மா பேரவை துணை தலைவர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், மாணவர் அணி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாணவர் அணி செயலாளர் ஜவகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.

    • கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
    • விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சாலைக்கார தெருவில் உள்ள மாநகராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் மேயர் சண் ராமநாதன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மொத்தமாக 12 எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இதில் தற்சமயம் ஒரு எந்திரம் பழுதாகி உள்ளதால் 11 எந்திரங்கள் மூலம் இன்று சுத்திகரிப்பு நடந்து கொண்டு உள்ளது.

    இன்னும் இரண்டு நாட்களில் பழுதான எந்திரமும் சரி செய்யப்பட்டு சுத்திகரிப்பு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இந்த சுத்திகரிப்பு நிலையம் 28 எம்.எல்.டி கொள்ளளவு கொண்டதாகும்.

    அதில் 13 எம் .எல். டி கழிவு நீரை நாள்தோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.

    இதிலிருந்து சுத்திகரிக்கப்படும் தண்ணீர் அனைத்தும் தற்சமயம் வடவாற்றில் விடப்படுகிறது.

    தண்ணீரை சுற்றுப்பகுதியில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலம் பயிரிடப்படுகிறது.

    அந்த விவசாயிகள் சுத்திகரிக்கப்பட்டு வரும் நன்னீரை விவசாய நிலத்திற்கு வழங்குமாறு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

    அந்த கோரிக்கை குறித்து விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    அது சம்பந்தமாக அனுமதி கிடைத்த பின்னர் விவசாயிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

    தற்சமயம் செய்யப்படும் ஆய்வு எதற்காக என்றால் மாநகராட்சி கூட்டங்களில் அடிக்கடி இந்த சுத்திகரிப்பு நிலையம் சரிவர வேலை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாநகர நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன், தமிழ்நாடு நீர் முதலீட்டு கழகக்குழு தலைவர் எழிலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.
    • செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் செந்தலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவமனை உபகரணங்கள் வழங்கும் விழா மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் எம் .எல். ஏ. தலைமையிலும் திருவையாறு ஒன்றிய பெருந்தலைவர் அரசாபகரன், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் கௌதமன், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் ராஜ்மோகன், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வசந்தகுமார், மாவட்ட துணை அமைப்பாளர் சுரேஷ், தஞ்சை தொகுதி அமைப்பாளர் டாக்டர் விக்னேஷ், தொகுதி துணை அமைப்பாளர்கள் பிரகாஷ், விஜயகுமார், பாட்ஷா, புவனேஸ்வரி, வெங்கடேசன், நிர்வாகிகள் டாக்டர் திருச்செ ல்வி, காயத்ரி, செந்தலை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.
    • விட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது தங்க நகைகளை காணவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் சாமியப்பா பிள்ளை வீதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா கமால் பாட்ஷா.

    இவரது மனைவி தாகிருநிசா பேகம் (வயது 58).

    இவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் எனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக வங்கி லாக்கரிலிருந்து நகைகளை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்.

    அதில் இருந்து 24 பவுன் தங்க நகைகளை மட்டும் வீட்டில் ஒரு அறையில் வைத்து விட்டு மீதி நகைகளை கழுத்தில் அணிந்து கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றேன்.

    திரும்பி வந்து பார்த்தபோது வைத்திருந்த இடத்தில் 24 பவுன் தங்க நகைகளை காணவில்லை.

    வீட்டின் பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனது வீட்டில் பணிபுரி வர்கள் மீது சந்தேகம் உள்ளது.

    காணாமல் போன நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தஞ்சை மின்நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்நகர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், சென்னம்பட்டி, மின் நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு விடுமுறை நாட்ககளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.
    • இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    நகராட்சி , மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும்.

    செயல் திறன் பணியாளர்களுக்கு இரண்டு கட்ட பதவி உயர்வை வழங்கிட வேண்டும்.

    நகராட்சிகளின் தரத்தினை உயர்த்தி புதிய பணியிடங்களை அனுமதிக்க வேண்டும்.

    அரசு விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வு கூட்டங்களை நடத்திடுவதை கைவிட வேண்டும்.

    பிற துறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்களை கொண்டு ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும்.

    1.10.1996 -க்கு முன்பாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்.

    01.04.2003 க்கு பின்பாக பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் இன்று 52 பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    வருகிற 17-ந் தேதி மண்டல அளவில் உண்ணாவிரதமும், அடுத்த மாதம் 15-ந் தேதி நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகம் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது என்றுமாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர் மற்றும் மாநில தலைவர் வெங்கிடுசாமி தெரிவித்துள்ளார்.

    • பிடித்து வந்த மீன்களுடன் வலையில் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார்.
    • தனது படகுமூலம் எடுத்துச் சென்று அரிய வகை ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டு வந்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள அண்ணா நகர் புது தெரு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன பிள்ளை மகன் ராஜா.

    இவர் புதன்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பினார். அப்போது தான் பிடித்து வந்த மீன்களுடன் வலையில் ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டார்.

    சக மீனவர்களுடன் ஆமை உயிருடன் இருப்பதை உறுதி செய்தார்.

    உடனடியாக தனது படகுமூலம் எடுத்துச் சென்று அரிய வகை ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டு வந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்து றையினர் மீனவர் ராஜாவை பாரா ட்டினர்.

    கடல்வாழ் அரிய வகை உயிரினங்களான கடல் குதிரை, கடல் அட்டை, கடல் ஆமை ஆகியவற்றை பிடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏரிகளில் அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.
    • மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்ட தமிழ் நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தஞ்சை கனிம வள உதவி இயக்குநர் மற்றும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள மனுவில் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    செங்கிப்பட்டி பகுதியில் செங்கிப்பட்டி ஆச்சாம்பட்டி, உசிலம்பட்டி, துருசுப்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள ஏரிகளில் விதிகளை மீறி அதிக அளவு ஆழத்திற்கு மண் எடுத்து லாரியில் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் குறைந்த பரப்பிற்கு அனுமதி பெறப்பட்டு பல ஏக்கர் பரப்பில் மண் எடுத்து வருகின்றனர்.

    சில இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடத்திற்கு பதிலாக வேறொரு இடத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல அதிக ஆழத்தில் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் பருவமழை காலங்களில் இதில் மழை தண்ணீர் தேங்கி கால்நடைகள் மற்றும் மனிதர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×