என் மலர்
தஞ்சாவூர்
- இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள கீழக்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 48) விவசாய கூலி தொழிலாளி.
இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனேவேதனை அடைந்த முருகேசன் பூச்சி மருந்தை ( விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 39 மக்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்ட செல்வதாக பொருள்.
- காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திராவிடா் கழகம் சாா்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். செயலவை தலைவர் அறிவுக்கரசு, பொருளாளர் குமரேசன், பொது செயலாளர்கள் அன்புராஜ், துரை சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் என்ற பட்டத்தை வீரமணி வழங்கி பாராட்டினார். தொடர்ந்து வீரமணி தொகுத்த தாய் வீட்டில் கலைஞர் என்ற நூலை முதல்-அமைச்சர் வெளியிட அதன் முதல் படியை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி பெற்று கொண்டார்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :-
தமிழ் மொழி, தமிழினம், தமிழ்நாட்டை காக்க, இந்தியா முழுவதும் சமதா்மம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதியைக் காக்க எனது வாழ்க்கையை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன் என்பதுதான் எனக்கு திராவிடா் கழகம் நடத்திய இந்த பாராட்டு விழாவில் நான் எடுத்துக் கொள்ளும் உறுதிமொழி.
ஏதோ சாதித்துவிட்டான், நினைத்ததை முடித்து விட்டான் என்பதற்காக நடத்துகிற விழா அல்ல.
இன்னும் நீ சாதிக்க வேண்டியது நிரம்ப இருக்கிறது. அதைச் சாதிப்பதற்கு நீ தயாராக இருக்க வேண்டும்.
நாங்கள் பக்கபலமாக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொள்வதற்காகத்தான் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது.
கூட்டாட்சி கருத்தியலை உள்ளடக்கிய இந்தியாவை அமைப்பதற்காகவே 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளோம்.
இது அரசியல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. தோ்தல் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை.
அந்த வெற்றிக்குப் பின்னால் அமையப்போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்தே நாங்கள் சோ்ந்துள்ளோம்.
தமிழ்நாடு இதுவரை இழந்த அனைத்து உரிமைகளும் மீட்கப்படும். கல்வி உரிமை, நிதி உரிமை, சமூக நீதி உரிமை, மொழி உரிமை, இன உரிமை, மாநில சுயாட்சி உரிமை ஆகிய அனைத்தையும் மீட்போம்.
தமிழ்நாட்டின் மக்கள்தொகை குறைந்துவிட்டது எனக் கூறி, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கிற சதியை அரங்கேற்ற பாா்க்கின்றனா்.
தமிழ்நாட்டிலிருந்து 39 மக்களவை உறுப்பினா்கள் நாடாளுமன்றத்துக்கு செல்வது, நமது உரிமையை நிலைநாட்டச் செல்வதாக பொருள்.
இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறினால், அது பொருத்தம்.
ஆனால், குறையக் கூடாது.மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக்க சட்டம் கொண்டு வந்தனா்.
ஆனால், அதை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி வரையறை முடிந்த பிறகு என சொல்வதே, இந்த இட ஒதுக்கீடு நிறைவேறாமல் இருப்பதற்கான தந்திரம்.
அதிலும் குறிப்பாக, இதர பிற்படுத்தப்பட்ட மகளிா் இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது பாஜகவின் உயா் வகுப்பு மனோபாவம். காலப்போக்கில் பட்டியலின இட ஒதுக்கீட்டை காலி செய்ய போகும் ஆபத்தும் இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பா் அலி, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலா் பாலச்சந்திரன், பாலபிரஜாபதி அடிகளாா் ஆகியோா் பாராட்டி பேசினா்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், எம்.பி.க்கள் டி.ஆா். பாலு, எஸ்.எஸ். பழனி மாணிக்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அன்பழகன், அசோக்குமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்வம், மகேஸ்கிருஷ்ணசாமி, மாநகராட்சி மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி, முரசொலி, செல்வகுமார், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் ராணி கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜோதிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தி.க. மாவட்ட தலைவர் அமர்சிங் நன்றி கூறினார்.
- நெகிழி விழிப்புணர்வு பேரணி மற்றும் கைத்தொழில் பற்றி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
- முகாமில் மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம், வாண்டையார் இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம் பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா, மாவட்ட தொடர்பு அலுவலர், பெற்றோர் ஆசிரியர், கழகத்தலைவர் ரதிகிருஷ்ணன், தணிக்காசலம் (ஓய்வு பெற்ற டி.எஸ்.பி), ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா மகேந்திரன் மற்றும் பலர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் தூய்மை பணிகள், நெகிழி விழிப்புணர்வு பேரணி மற்றும் கைத்தொழில் பற்றி சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. முகாமில் மாணவ-மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.
- டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
- கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சார்ந்த தி.மு.க விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
எனவே எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது.
தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.
காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும், கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முழு அடைப்பு தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி உள்ளோம்.
டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு சூழலுக்கு ஏற்ப இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவர் எப்போதுமே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் சண்முகம், மாநில பொதுச்செயலர்கள் மாசிலாமணி, சாமி. நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன், கூட்டியக்க நிர்வாகிகள் காளியப்பன், பழனிராஜன், என்.வி. கண்ணன், செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
- புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்லப்பா, சுகாதார ஆய்வாளர்கள் நாடிமுத்து , மருத்துவமில்லா மேற்பார்வையாளர் தியாகராஜன், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் நித்தியானந்தம் மற்றும் டெங்கு களப்பணியாளர்கள் சேர்ந்து டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தேங்கியுள்ள டயர்களையும் தேவையற்ற பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள்.
பாபநாசம் பகுதியில் புகையிலை விழிப்புணர்வு ஏற்படுத்தி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 12 கடைகளுக்கு ரூ.2,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவிப்பதாக அறிவித்திருந்தார்.
- 2-வது பிரசவத்துக்காக பெரியக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள பெரியக்கோ ட்டையில் இயங்கிவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பிரசவம் நடை பெறாததாலும் பொதுமக்க ளுக்கு இருக்கும் அச்சத்தை போக்கும் விதமா கவும் அங்கே மருத்துவராக பணிபு ரியும் மணவழகன் இங்கு பிரசவமாகும் குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவி ப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு சொக்கனாவூர் மேலதெருவை சேர்ந்த தர்மராஜ் மனைவி சுமித்ரா (வயது 23) இரண்டாவது பிரசவத்துக்காக இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு இரவு நேரத்திலும் பெண் மருத்துவர் பூர்வி சிகிச்சை அளித்தார்.
அவருக்கு உறுதுணையாக செவிலியர்கள் வினோதா, கலா, சூசைஅந்தோனி, ஆயா செல்வி இருந்தனர்.
சுகப்பிரசவம் செய்ததில் சுமித்ராவுக்கு பென் குழந்தை பிறந்தது.
இதையடுத்து டாக்டர் மணவழகன் ஏற்கனவே கூறியது போல பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளங்கோ மூலமாக அணிவித்தார்.
- கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
- வேளாண் உபகரணங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்.
மெலட்டூர்:
சாலியமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .
மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய கடன் வழங்குதல், உரம் வழங்குதல், குறுவை தொகுப்பு திட்டம், பொங்கல் தொகுப்பு உள்பட அவ்வப்போது அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படா மல் உள்ளது.
இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது .
இந்நிலையில் வேளாண் உபகரணங்களை விலைக்கு வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு வங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை.
அதனால் இத்திட்டத்தை கைவிட கோரி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு உடனடியாக இத்திட்ட த்தை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை குறித்து எடுத்துரைத்தார்.
- உதவி திட்ட அலுவலர் கில்பர்ட் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தூய அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்காக முன்னையம்பட்டி ஊராட்சி புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் கலந்து கொண்டு , இன்றைய மாணவர்களின் தேவைகளும், சமூகப் பணிகளில் மாணவர்கள் தங்களை எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது, தன்னம்பிக்கை வளர்ப்பதை பற்றியும், போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளைப் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஏகம் பவுண்டேஷன் இன்பதுரை, ரமேஷ் பிரகாஷ், தூய அந்தோனணியார் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட திட்ட அலுவலர் பிரிட்டோ , உதவி திட்ட அலுவலர் கில்பர்ட் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
- டி.என்.பி.எஸ்.சி தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை முன்பு சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை சார்பில் அதன் மத்திய செயற்குழு உறுப்பினர் கவிஞர் பாட்டாளி தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் அருணாச்சலம் முன்னிலை வகித்தார். கையெழுத்து இயக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத்துறை வேலைகளில் தமிழ்நாடு தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் மூலம் நடத்தப்படுகின்ற தேர்வில் வெளி மாநிலத்தவர்கள் பங்கேற்பது தடை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு தமிழர்களுக்கே என்று சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் பொறியாளர் திருநாவுக்கரசு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அயனாபுரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வசேவையா, மாநகர செயலாளர் பிரபாகர், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் ராவணன், தமிழர் அறம் இயக்கத்தின் தலைவர் ராமசாமி, எழுத்தாளர் சாம்பான், விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி யோகராஜ், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சுரேஷ், ஆதித்தமிழர் பேரவை முன்னாள் மாவட்ட தலைவர் நாத்திகன், மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகராஜன், தமிழ் தேச மக்கள் முன்னணி செயலாளர் ஆலம்கான், மக்கள் விடுதலை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பாஸ்கர், ஜோதிவேல், விசிறி சாமியார் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- துலுக்கம்பட்டி புறவழிச்சாலையில் சில நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? என விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே துலுக்கம்பட்டி புறவழிச்சா லையில் சில நாட்களாக துர்நாற்றம் வீசி வந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்து கிடந்த ஆண் ஒருவரது பிணத்தை நாய்கள் கடித்து குதறியிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து உடனே அவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மற்றும் போலீசார் விரைந்து சென்று, பிணத்தை பார்வையிட்டனர்.
அழுகிய நிலையில் இருந்த பிணத்தில் உள்ளாடைகள் ஆண்கள் அணியக்கூடியதாக இருந்ததால், அதை வைத்து இறந்தவர் ஆண் என்பது தெரிய வந்தது.
சுமார் 40 வயது மதிக்கத்தக்க இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
மேலும், கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததால், இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து பிணத்தில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார் ? அவரை யாரேனும் அடித்து கொலை செய்து வீசி சென்றனரா ? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 100 நாள் வேலையை 200 நாளாக அதிகரித்து தினம் ஊதியமாக ரூ.600 வழங்க வேண்டும்.
- பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் இன்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்ப டுகிறது.
இதனை 200 நாட்க ளாக மாற்றி தினந்தோறும் ஊதியமாக ரூ.600 வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 40 முதல் 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
அதிலும் 1 கோடியே 31 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 80 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுகிறது.
இதனை முறைப்படுத்தி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஊதிய த்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்த வேலை திட்டத்தில் பல தொழிலாளர்கள் சரியாக வேலை பார்க்காமல் உள்ள தாக கூறுவது முற்றிலும் பொய்.
அவர்கள் தினமும் பார்க்கும் வேலையை சரியாக அளவீடு செய்து அதன் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தினமும் மொபைல் மூலம் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதை கைவிட வேண்டும்.
மேலும் பல இடங்களில் குறிபிட்ட தேதியில் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த குறைபாட்டை களைந்து சரியான தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில பொருளாளர் சந்திரகுமார், சங்கத்தின் மாநில துணை தலைவர் மாரிமுத்து எம்.எல்.ஏ, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி, சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாஸ்கர், நிர்வாகிகள் மகேந்திரன், பழனிச்சாமி ,தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமமூர்த்தி உள்பட பலர் உடன் இருந்தனர்.
- இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கீழத்தெ ருவை சேர்ந்தவர் மகேந்திரன்.
இவரது மகன் தேசிகன் (வயது 26).
கூலி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.






