என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கயிறு தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து
Byமாலை மலர்11 Oct 2023 3:19 PM IST
- அங்கு வைத்திருந்த கயிறு, பஞ்சு கட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
- எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி நாட்டாணிக்கோட்டை பகுதியில் ஆர்ஜி ஃபைபர் என்ற பெயரில் தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு,கயிறு தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.வழக்கம் போல் நேற்று மாலை வேலை முடித்து சென்றார். இந்நிலை யில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியதில் நிறுவனத்தில் இருந்த தளவாட சாமான்கள் , தயாரித்து வைத்திருந்த கயிறு, பஞ்சுகட்டுகள், காயர் பித் கேக்குகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்ப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உடனடியாக தீயை அணைத்து, மேலும் பரவாமல் தடுத்தனர்.எரிந்து சாம்பலான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது .
Next Story
×
X