என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
    • 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்

    திருநாகேஸ்வரம்:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸின் 55-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் நேற்று கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

    அதனை தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ம.க.ஸ்டாலின் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்பட்டது. பின்னர் அவர் கூறுகையில்:-

    இன்றும், நாளையும் 61 கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சங்கர், மாநகர செயலாளர் பாலகுரு, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் வினோத் சுந்தரம், செபாஸ்டின் ராஜ், ரமேஷ், பெரியசாமி, ஆடுதுறை பாலு, சாமிநாதன், பகுதி செயலாளர் கணேஷன், சுப்புராமன், பழ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது.
    • நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 29). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசன் கடந்த 6-ந் தேதி நண்பர் ஒருவருக்கு தான் கணக்கு வைத்துள்ள தஞ்சை தனியார் வங்கி மூலம் ரூ.1000 செலுத்தினார். பின்னர் செல்போனில் அதற்கான குறுஞ்செய்தி அவருக்கு வந்த போது வங்கி கணக்கில் ரூ.756 கோடி இருப்பு தொகை மீதம் இருப்பதாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் அந்த தனியார் வங்கிக்கு சென்று இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து வங்கியில் உள்ளவர்கள் கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக்கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் எந்த தகவலும் தெரியாததால் கணேசன் வங்கி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்துள்ளார். ஆனால், அதில் ரூ.756 கோடி இருப்பு தொகை காட்டாமல் அவரது சேமிப்பு தொகையை மட்டுமே காட்டியது.

    இந்நிலையில் கணேசன் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும்.

    நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்ததால் கணேசன் நிம்மதி அடைந்துள்ளார். 

    • ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராகு-கேது பெயர்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் மீன ராசிக்கு ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதத்தில் கன்னி ராசிக்கு கேதுவும் சென்றனர்.

    இதனையடுத்து ராகு-கேது பரிகாரத்தலங்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது. இதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் நேற்று ராகு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இதையொட்டி ராகு பகவானுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம் தேன் பால் இளநீர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கடம் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்கமுலாம் பூசிய கவச அலங்காரத்தில் நாககன்னி நாகவல்லி உடனாய ராகு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ராகு பெயர்ச்சி அடையும் மதியம் 3.40 மணிக்கு ராகு பகவானுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேது பெயர்ச்சியையொட்டி சாமிக்கு நேற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாராதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர். கேது பெயர்ச்சி நாளில் இருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    • நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.
    • இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ்ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

    வேதியியல் துறைத்தலை வர் ராஜராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரோசி தலைமை வகித்தார்.வேதியியல் துறை உதவி பேராசிரியர் சித்திரவேல் அறிமுக உரையாற்றினார்.

    இதில் சந்திராயன்- 3, ஆதித்யா எல்- 1 என்ற தலைப்பில் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முன்னாள் இயக்குநரும் சென்னை ஐ.ஐ.டி. கவுரவ பேராசிரியரும், விஞ்ஞானி யுமான பாண்டியன் பேசு கையில், இந்தியா, நிலவின் தென் துருவத்தில் உலகில் முதன்முதலாக கால் பதித்தது. சந்திராயன்-3 என்ற செயற்கைக்கோள் உதவியுடன் விக்ரம் லேண்டரை இறங்க வைத்து அதிலிருந்து பிரக்யான் ரோவர்என்பது நிலவில் ஆய்வை மேற்கொண்டது.ஆதித்யா-எல்.1 சூரியனை ஆய்வு செய்கிறது.

    இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இப்போது இஸ்ரோவில் பல்வேறு ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத் திக்கொண்டு பணியாற்றி வருபவரும் சங்கரன் உங்களுக்கெல்லாம் வழிகா ட்டியாக உள்ளார்.

    இளநிலை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இஸ் ரோவில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.

    மேலும், மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். முடிவில் வேதியியல் துறை இணைப் பேராசிரியர் ஞானசுந்தரம் நன்றி கூறினார்.

    • டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன.
    • மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநிலங்களையும் அழைத்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    விடுதலைத் தமிழ்ப்புலி கள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

    காவிரியில் சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக அரசு அடாவடித்தனம் செய்கிறது.

    உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுகளை மதிக்காமல் கர்நாடக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பேசி வருவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தி ற்கு ஊறுவிளைவிக்கும் செயலாகும்.

    காவிரி பிரச்சினையை உடனடியாக மத்திய அரசு பேசி தீர்வு காண வேண்டும். தமிழக அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

    காவிரி ஆணையம் கொடுத்த உத்தரவை பின்பற்றி உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.

    உரிய நீர் இல்லாமல் டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வீணாகி விட்டன.எஞ்சிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே எஞ்சிய பயிர்களை காப்பாற்ற முடியும். அடுத்து சம்பா சாகுபடியை தொடங்குவதே கேள்விக்குறியாக உள்ளது.

    தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 40,000 ஏக்கருக்கு மட்டும் ஹெக்டேர் 1க்கு ரூ. 13,500 அதாவது ஏக்கருக்கு ரூ. 5400 மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது எந்த வகையில் பொருந்தும். இதை விவசாயிகள் ஏற்கக்கூடிய அறிவிப்பாகுமா?.

    எனவே,தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    காவிரி நீர் விவசாயிகள் வாழ்வாதர உரிமைகள் என்பதை உணர்ந்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநிலங்களையும் அழைத்துப் பேசி நல்ல முடிவை எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உடனே காவிரி நீர் திறந்து விடக்கோரியும், பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் வரும் 14-ந் தேதி விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் உழவர் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பில் அனைத்து விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு வாரம் அனைத்து துறைகள் சார்பில் 5-ந் தேதி தொடங்கி வரும் 11-ந் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை யில் இன்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வழிகாட்டுதலில் அனைத்து துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் இருந்து தொடங்கியது.

    இப்பேரணியினை தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் மாவட்டத் தீயணைப்பு அலுவலர் குமார், உதவி மாவட்ட அலுவலர் முனியாண்டி, மாவட்ட சமூக நல அலுவலர் அனுராப்பூ நடராஜமணி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் உமா மகேஸ்வரி, சி தொண்டு அமைப்பு நிறுவனர் முனைவர் ஜெகதீஸ்வரி, ரெட்கிராஸ் துணைச் சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைந்த சேவை மைய பொறுப்பாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள் மற்றும் அனைத்து துறை பணியாளர்கள், பள்ளி ,கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்று மீண்டும் விளை யாட்டு மைதானம் வந்தடைந்தனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல் செய்திருந்தார்.

    • தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
    • கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிதாக தார்சா லைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்னும் பல இடங்களில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தார்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் சில இடங்களில் அந்த வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு அருகே வந்த பிறகு தான் வேகத்தடை இருப்பது தெரிகிறது.

    இதன் காரணமாக சிலர் தடுமாற்றத்துடன் விழுகின்றனர்.

    குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து நடக்கிறது.

    எனவே சாலையில் வேகத்தடை அமைக்கும் போதே வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    இல்லையென்றால் வேகத் தடுப்பில் அடிக்கும் வெள்ளை நிறத்திற்குப் பதில் வேகத்தடுப்பு கலவை தயாரிக்கும் போதே அதே வெள்ளை நிறம் கலந்து தயாரிக்கலாம் என்று வாகன வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் எங்கெல்லாம் வேகத்தடைக்கு வர்ணம பூசாமல் உள்ளது என கண்டறிந்து அதறகு வெள்ளை வர்ணம் பூச வேண்டும்.

    தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மகாரா ஜபுரம் கிராமத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இருந்த இந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளால் இடிக்கப்பட்டது.

    கடந்த இரண்டாண்டுக்கு மேலாக நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் நின்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி கல்லணை பூம்புகார் சாலையை முற்றுகையிட்டு அதேபகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கல்லணை பூம்புகார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போ ராட்டம் கைவிடப்பட்டது.

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் 10-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அருளா னந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.ஊ.சி.நகர், பூக்கார தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைந கர், ஜெ.ஜெ.நகர், திரிபுரசுந்தரிநகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நியூ ஹவுசிங் யூனிட், முல்லை, மருதம், நெய்தல், நட்சத் திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர்,சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தையேசு கோவில் ஆகிய இடங்களில் 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரியில் தண்ணீர் வரவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும்.
    • நவக்கிரக பூஜை, சிறப்பு ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

    சுவாமிமலை:

    கும்பகோணம் மேலக்காவேரி தனியார் திருமண மண்டபத்தில் துரைதலைமையில் உலக நலன் வேண்டி மகாளய பட்ச பருவத்தில் வேதபாராயண சத்சங்கம், சிறப்பு ருத்ர ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது.

    இந்த ருத்ர ஜப ஹோமத்தில் காவிரியில் தண்ணீர் வரவேண்டும்.

    விவசாயம் செழிக்க வேண்டும். உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்று உலக நலன்வேண்டி 100-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் கலந்துகொண்டு கோபூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, சிறப்பு ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ் ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்தனர்.

    இதில் குடந்தை மற்றும் சென்னையை சேர்ந்த ஆச்சாரியார்கள், வேதபட்டிதர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியானது 4 அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

    கும்பகோணம்:

    ரோஹித் ஷர்மாவின் கிங்டம் கிரிக்கெட் அகாடமி மற்றும்கிரிம்சன்ஸ் ஸ்போர்ட்ஸ் சார்பில்பயிற்சியாளர் மணிகண்டன் தலைமையில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் யூத் பிரீமியர் லீக் கிரிக்கெட் வீரர்களின்நேர்முக தேர்வு நடைப்பெற உள்ளது.

    கும்பகோணம் பகுதியை சுற்றியுள்ள கிராமப்புற கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கில் யூத் பிரிமியர் லீக் போட்டி 4 அணிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    கிரிக்கெட் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் தேர்வில் கலந்து கொண்டு பயன் பெற லாம் என்று பயிற்சியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • கோவில் உட்பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இங்குள்ள 16 கரங்களுடைய சக்கரத்தாழ்வார் 16 வகையான செல்வங்களை தருவதாக ஐதீகம்.

    பக்தர்கள் இக்கோவில் உட்பிரகாரத்தை 24முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் இன்று புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.

    ×