அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் திருட்டு

ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது
அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் திருட்டு
Published on

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில் நிலையம் அருகில் அரசு கால் நடை ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் பெரும் சேதம் அடைந்ததால் இந்த ஆஸ்பத்திரி அருகிலேயே சுமார் ரூ.40 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

பழுதடைந்துள்ள ஆஸ்பத்திரியில் உள்ள மருத்துவ உபகரணங்கள் இந்த புதிய கட்டிடத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருந்து பொருட்கள் எடுப்பதற்காக கால்நடை உதவி மருத்துவர் ஜானகிப்பிரியா சென்ற போது புதிய கட்டிடத்தின் பின்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கால்நடை அறுவை சிகிச்சை உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com