search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம்
    X

    தஞ்சையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

    தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம்

    • டெல்டா மாவட்ட ங்களில் கடையடைப்பு போராட்டமும், மறியல் போராட்டமும் 11-ந் தேதி நடக்கிறது.
    • போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர அளவு நீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடாததை கண்டித்தும், உடனடியாக தண்ணீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்தியும், வருகிற 11-ந்தேதி டெல்டா மாவட்ட ங்களில் காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் கடையடைப்பு போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும் நடக்கிறது.

    இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, தி.க.மாவட்ட தலைவர் அமர்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் செந்தில்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர பொருளாளர் துரைசிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் அண்ணாதுரை, விவசாய கட்சி பிரதிநிதிகள் கண்ணன், கோவிந்தராஜ் மற்றும் விவசாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள கடை அடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு அனைத்து கட்சி மற்றும் விவசாய சங்கம் சார்பில் ஆதரவு தருவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×