search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக நீடிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,600 கன அடியாக நீடிப்பு

    • மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 3 நாட்களாக 9,600 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி அளவில், 7600 கன அடியாக குறைந்தது.
    • அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 12 நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9000 கன அடியாக சரிந்துள்ளது. இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    அதேபோல் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து 3 நாட்களாக 9,600 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி அளவில், 7600 கன அடியாக குறைந்தது.

    இன்றும் அதே அளவு தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 7000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இன்று 12 நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

    Next Story
    ×