search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூங்காவை முறையாக பராமரிக்காத 76 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை
    X

    சென்னை மாநகராட்சி

    பூங்காவை முறையாக பராமரிக்காத 76 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம்- சென்னை மாநகராட்சி நடவடிக்கை

    • சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ. 1.54 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல்வெளிகளை வெட்டி பராமரித்தல், தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராமரிக்க வேண்டும்.

    மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

    மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத 76 ஒப்பந்த நிறுவனங்களுக்கு ரூ.1,54,718 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் பராமரிப்பு பணியில் தொடர்ந்து குறைபாடு மற்றும் தொய்வு கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×