search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை
    X

    நரசிம்மர் வீதி உலா வந்த காட்சி.


    கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை

    • கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை நடைபெற்றது.
    • மகாலட்சுமி ஹோமம் நடந்தது.

    வீ.கே.புதூர்:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி மாலையில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×