search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரள பெண்ணை கடத்தி குடும்பம் நடத்திய சூலூர் வாலிபர்
    X

    கேரள பெண்ணை கடத்தி குடும்பம் நடத்திய சூலூர் வாலிபர்

    • 3 ஆண்டுகளுக்கு பிறகு உண்மை தெரிந்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • பெண்ணை தேடி கேரள போலீசார் கிராமத்துக்கு வந்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலை விஷயமாக அடிக்கடி கேரளா சென்று வந்தார். அப்போது திருச்சூரைச் சேர்ந்த பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நேரிலும், செல்போனிலும் அவர்கள் பேசி மகிழ்ந்தனர்.

    திடீரென அந்த வாலிபர் கேரள பெண்ணை அழைத்துக் கொண்டு சூலூர் அருகே உள்ள தனது சொந்த ஊருக்கு வந்தார். கிராமத்தினரிடம் தான் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

    பின்னர் தனியாக வீடு எடுத்து வாலிபரும், கேரள பெண்ணும் குடும்பம் நடத்தினர். அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. வாலிபரும், அந்த பெண்ணும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அந்த பெண்ணை தேடி கேரள போலீசார் கிராமத்துக்கு வந்தனர். போலீசார் கிராமத்தினர் முற்றுகையிட்டு விவரம் கேட்டனர். அந்த பெண்ணை அழைத்து செல்ல வந்துள்ளதாக தெரிவித்தனர். அவர் காதலித்து திருமணம் செய்துள்ளார், அவரை அழைத்துச் செல்ல விட மாட்டோம் என சிலர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    அப்போது நடந்த விவரங்களை கேரள போலீசார் தெரிவிக்க கிராம மக்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். வாலிபர் திருமணம் செய்த கேரள பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். கடந்த 2019-ம் ஆண்டு திருமணத்துக்கு பின்னர் பெண்ணின் கணவர் அவரை ஊரில் விட்டு விட்டு வெளிநாட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது தான் சூலூர் வாலிபருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு அவர் இங்கு ஓடி வந்துள்ளார்.

    ஆனால் அந்த பெண் எங்கு சென்றார், என்ன ஆனார் என்பது அங்குள்ள யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதனால் பெண்ணின் கணவர் மனைவியை கடந்த 3 ஆண்டுகளாக தேடி வந்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்ததுடன் கோர்ட்டுக்கும் சென்றார். கோர்ட்டு அந்த பெண்ணை கண்டுபிடித்து ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பே ரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொ ண்டதில் அந்த பெண் சூலூரில் வேறு வாலிபரு டன் குடும்பம் நடத்துவது தெரியவந்தது. அதன்பிறகு தான் கேரள போலீசார் அந்த பெண்ணை அழைத்துச் செல்ல இங்கு வந்துள்ளனர்.

    இந்த விவரங்களை கேட்டதும், இதில் இவ்வளவு வில்லங்கம் இருக்கிறதா என்பதை அறிந்த கிராமத்தினர் ஆளை விட்டால் போதும் என அங்கிருந்து கலைந்து சென்றனர். போலீசார் அந்த ெபண்ணை கேரளா அழைத்துச் சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் மீண்டும் சூலூர் வாலிபருடன் இணைவாரா அல்லது முதல் கணவருடன் செல்வாரா என்பது தெரியவரும்.

    Next Story
    ×