என் மலர்
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த கலெக்டர் ஜெயகாந்தன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், கிருங்காக்கோட்டை கிராமத்தில் வருகிற 14-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தப்பகுதி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியாகவும், பொதுமக்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க இயலாதென சிங்கம்புணரி வட்டாட்சியர் அனுமதி மறுத்தார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசால் சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வருடத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலமே அனுமதிக்கப்பட்ட காலம் என்பதால் கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசால் அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை.
தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் சிங்கம்புணரி வட்டாட்சியர் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு 14-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறாத வகையில் கண்காணித்து சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அன்றைய தினம் தடையை மீறி பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத குடியிருப்பு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக ஜல்லிக்கட்டு நடத்தினால் கிராம ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் விழா குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதி பெறாத கிருங்காக்கோட்டை கிராமத்திற்கு ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் ஜல்லிக்கட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களும், ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர்களும் பொதுமக்கள் நலன் கருதி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் சட்டப்படி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேவகோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 5,376 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.
காரைக்குடி:
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் கலையரங்கில் தேவகோட்டை கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 23 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 5 ஆயிரத்து 376 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் திட்டங்களிலேயே மிகவும் புரட்சிகரமான திட்டம் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக் கணினி வழங்கும் திட்டமாகும். தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், அவர்கள் அறிவியல் முன்னேற்றத்தோடு கல்வி கற்க வேண்டும் என்பதை உணர்ந்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த திட்டத்தை உருவாக்கினார்.
அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளை நல்ல முறையில் மாணவர்கள் பயன்படுத்தி உயர் பதவிக்கு வர வேண்டும். அப்போது தான் அவர்களுக்கும், அவரது பெற்றோருக்கும், நாட்டிற்கும் பெருமையாக இருக்கும். இதை உணர்ந்து மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.பி. செந்தில்நாதன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஈஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ. கற்பகம் இளங்கோ, அ.தி.மு.க. நகர செயலாளர் மெய்யப்பன், சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் சுப்பிர மணியன், நகர இளைஞரணி செயலாளர் இயல் தாகூர், மாவட்ட செய்தி தொடர்பு அலுவலர் பாண்டி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
காரைக்குடி அருகே வாகனம் மோதியதில் வாலிபர் உடல் நசுங்கி பலியானார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
காரைக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகில் உள்ள குறுந்தாடி பாலம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் சிவா(வயது 21). இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருச்சி-ராமேசுவரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது.
இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்ரோரம் மொபட்டுடன் நடந்து சென்று கொண்டிருந்த 2 பேர் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சிவா ரோட்டில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிவா மீது ஏறிவிட்டு சென்றது. இதில் உடல்நசுங்கி சிவா துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து செட்டிநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தற்கொலைக்கு முயன்ற பெண்ணிற்கு நீதிபதி நூதன தண்டனை வழங்கினார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா (வயது 25). இவர் செக்காலைவீதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் கடையில் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் தொந்தரவு செய்ததாக கூறி கார்த்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
அதற்கு முன்னதாக வாட்ஸ்-அப்பில் அழுகையோடு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார். இந்த வாட்ஸ்-அப் தகவல் காரைக்குடி நகர் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கார்த்திகா சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்தநிலையில் காரைக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நடுவர் பாலமுருகன் தாமாக முன்வந்து, இது குறித்து விசாரிக்க கார்த்திகாவை கோர்ட்டில் ஆஜர்படுத்த வடக்கு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் கார்த்திகாவை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது நடந்த சம்பவம் குறித்து போலீசார் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்று கார்த்திகாவிடம் நீதிபதி கேட்டதற்கு, அவர் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறினார். பின்பு போலீசாரிடம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டபோது, போலீசார், கார்த்திகா எவ்வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறியதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து கார்த்திகாவிற்கு அறிவுரை வழங்கிய நீதிபதி, காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரு வாரம் சென்று, தற்கொலை முயற்சி செய்து, அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம், தற்கொலை மனநிலையை போக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க உத்தரவிட்டார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை:
மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலெக்டர் பேசியதாவது:- அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும்.
மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல் குளங்கள், ஊருணிகள் மற்றும் கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.
இந்த பணியினை ஒருமாதத்திற்குள் விரைந்து முடித்திட அதிகாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும். நீர்நிலை ஆதாரங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட பணிகள் மேற்கொள்ள வேண்டும். தெருவிளக்குகள் போன்ற கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகளை மேற்கொள்வதுடன் சாலைகள், பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் அருண்மணி, உதவி இயக்குனர் விஜயநாதன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள துளாவூரில் பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. இது குறித்து 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா இளங்குடி அருகே உள்ளது துளாவூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மடபதி ஊருணிக் கரையில் பழமை வாய்ந்த சந்தன கருவேலா என்று அழைக்கப்படும் நாட்டுக் கருவேல மரங்கள் உள்ளன. இதன் நிழல் பொதுமக்கள் மற்றும் ஆடு, மாடுகள் இளைப்பாறும் இடமாக விளங்கியது.
திடீரென இந்த ஊருணியை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் திருப்பத்தூர் தாசில்தார் தங்கமணிக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்று பார்த்த போது மரத்தை வெட்டிய மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இது குறித்து இளங்குடி கிராம நிர்வாக அலுவலர் ராஜாசக்கரவர்த்தி குன்றக்குடி போலீசில் பார்த்திபன் என்பவர் மீது புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பார்த்திபன், சுந்தரேசன் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாசில்தார் கூறுகையில், அரசு இயற்கைச் சூழலைப் பாதுகாக்க மரம் நடுதலில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஒரு கிராமத்தில் இவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி கலெக்டர், தேவகோட்டை கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுபற்றி கிராம மக்கள் கூறும் போது, தலைமுறையாக நிழல் தந்த மரங்களை வெட்டியது வேதனையாக உள்ளது. நன்கு வளர்ந்த மரத்தை வெட்டி கொடுஞ்செயல் புரிந்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
காரைக்குடியில் புதிய மீன்மார்க்கெட் கட்டிடத்தை திறக்க பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி:
காரைக்குடி நகர் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இந்த நகரில் வசிக்கும் மக்கள் வாரந்தோறும் புதன், ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் அதிகஅளவில் அசைவத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் மீன் பிரியர்கள் அதிகஅளவில் உள்ளனர். பொதுவாக காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மீன்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் ராமேசுவரத்தில் இருந்து வரும்.
இந்நிலையில் காரைக்குடி பகுதியில் மீன் மார்க்கெட் இல்லாததால் நகர் முழுவதும் ஆங்காங்கே சாலையோரங்களில் தார்ப்பாயை விரித்து வியாபாரிகள் கடை போட்டு நடத்தி வருகின்றனர். இதனால் அவற்றின் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது. இதையடுத்து ஆங்காங்கே போடப்படும் கடைகளை ஒரே இடத்திற்கு கொண்டுவர காரைக்குடி நகரில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து இந்த கோரிக்கையை ஏற்று காரைக்குடி நகராட்சி வாரச்சந்தை அருகில் தேசிய மீன்வள வாரியம் சார்பில் ரூ.1கோடி மதிப்பீட்டில் மீன்மார்க்கெட்டுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 60 கடைகள் உள்ளன.
இந்நிலையில் இந்த மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதனால் சாலையோரத்தில் மீன்கடை போடும் வியாபாரிகள் எண்ணிக்கை வாரந்தோறும் பெருகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மீன்மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதன் மூலம் காரைக்குடி நகர் சுகாதார கேடு இல்லாத நகரமாக உருவாகும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையில் மின்சாரம் தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு கலெக்டர் ஜெயகாந்தன் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் உதவி வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
வேலை வாய்ப்பு, இலவச வீட்டுமனைப்பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் இயந்திரம் வழங்கக் கேட்டல், ஆக்கிர மிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு உள்ளிட்ட 312 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
பின்னர் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு மின்சாரம் தாக்கி இறந்த அவரது வாரிசுதாராகிய மனைவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையினையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ.1,91,500-க்கான காசோலையினையும் ஆக மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.4,91,500 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமபிரதீபன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு கனிமநிறுவன மேலாண்மை இயக்குனர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேசன் காசிராஜன், தலைமையிலும் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள நகராட்சி யூனியன் பேரூராட்சி அலுவலர்களுடன் அவர் ஆய்வு நடத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பின்னர் மகேசன் காசிராஜன் பேசியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 445 கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தங்குதடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 2,723 குக்கிராமங்கள் உள்ளன. இதில் 1,730 குக்கிராமங்களுக்கு தினசரி குடிநீர்வினியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 993 குக்கிராமங்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் 217 குக்கிராமங்கள் கோடைகாலத்தில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்பதை முன்னரே கண்டறியப்பட்டு ரூ.12 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மற்றபடி 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகளில் சில இடங்களில் குடிநீர் தினசரியும் மற்றும் ஒருசில இடங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் வழங்கப்பட்டு வருகிறது. வரும் நிதியாண்டில் நீர்நிலை ஆதாரங்களை சீர்செய்ய கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆதாரங்களும் சீர்செய்யும் பணி தொடங்கப்பட்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் மக்களை ஏமாற்றி தி.மு.க.வினர் வெற்றி பெற்று விட்டனர் என்று எச்.ராஜா கூறினார்.
இளையான்குடி:
இளையான்குடி தாலுகா குணப்பனேந்தல் கிராமத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ராஜபிரதீப் தலைமையில் நடைபெற்றது. இதில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு தேர்தலில் பா.ஜனதாவிற்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:–
சிவகங்கை பாராளுமன்ற தொகுதில் வெற்றி பெறாவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியின் மூலம் நல்லது செய்வேன்.
ஆனால் தீயசக்திகளின் கையில் நாடு செல்லாமல் காப்பாற்றி மோடியின் கையில் நாடு ஒப்படைக்கப்பட்டதால், தி.மு.க., காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அவர்களால் நிறைவேற்ற முடியாது. அவர்களின் கூட்டணி பொய்களை பரப்பி மக்களை ஏமாற்றி தமிழகத்தில் வெற்றி பெற்று விட்டனர். இனி அவர்களின் பொய் பிரசாரம் எடுபடாது. இந்தி எதிர்ப்பு என கூறும் தி.மு.க.வினர் தான் அவர்கள் நடத்தி வரும் 45 பள்ளிகளில் இந்தியை கற்றுக்கொடுத்து, தமிழில் பேசினால் அபராதம் போடுகின்றனர்.
இதை மக்களிடம் நிரூபிப்பேன். இளையான்குடியில் எனக்கு தேர்தல் பணி செய்ததால் எங்களது கட்சிக்காரர் பூச்சியனேந்தல் கிராமத்தை சேர்ந்த விமல் என்பவர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளதை கண்டித்து போராட்டம் நடத்துவேன். பிரதமர் மோடியின் படத்தை சர்ச்சுக்கு முன் வைக்க எதிர்ப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்து என்றால் இளக்காரமாக இனி நடத்தக் கூடாது.
தமிழகத்தின் எதிர்ப்பான திட்டம் எல்லாம் தி.மு.க.வால் வந்தது என்பதை மக்கள் தெரியும் காலம் வரும். அப்போது அந்த கட்சி காணாமல் போகும். அதேபோல வெற்றி பெற்ற பலர் விரைவில் சிறைசெல்லும் காலம் மிக அருகில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட தலைவர் சொக்கலிங்கம், துணை தலைவர் சிதம்பரம், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
திருப்பாச்சேத்தி வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
திருப்புவனம்:
திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி ஊராட்சியிலுள்ள வைகை ஆற்றில் ஊரக வளச்சித்துறையின் சார்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அமைச்சர் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்பு தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கும் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே தண்ணீரை சேமித்து வைக்க பொதுமக்கள் முன்வந்து மழைநீர் சேமிப்பு மையங்களை உருவாக்க வேண்டும். அந்தவகையில் தற்போது வைகை ஆற்றில் திருப்பாச்சேத்தி மற்றும் முத்தனேந்தல் பகுதியில் தலா ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.
இந்த தடுப்பணை ஆற்றின் குறுக்கே பிரமாண்ட பள்ளம் தோண்டி அதில் மணல் மூடைகள் அடுக்கி, அதன்மேல் மணல் மூலம் தளம் அமைக்கப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் வைகையாற்றில் தண்ணீர் வரும் போது, இந்த பகுதியில் நீர் தேங்கி மணல் மூடைப்பகுதி முழுவதும் தண்ணீரை உறிஞ்சி தேக்கி வைப்பதால் கரைகளின் இருபக்கங்களிலும் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மேலும் இந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும். அது விவசாயப் பணிகளுக்கும், பொதுமக்களுக்கான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும்.
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றுவதால் தனிநபர் பொருளாதாரமும் முன்னேற்றமடையும். நிலத்தடி நீர்மட்டம் நிலையாக இருப்பதற்கு இந்த திட்டம் மிகப்பயனுள்ளதாக இருக்கும். தற்போது 2 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் மேலும் 5 இடங்களில் புதிதாக அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு பணியின் போது நாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜஹாங்கீர், முத்துக்குமார், தாசில்தார் ராஜா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
மானாமதுரை:
மானாமதுரை அருகே வான்புரம் மாதா நர்சிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாதா நர்சிங் கல்லூரி முதல்வர் அருள்மணி எஸ்தர் ராணி தலைமை வகித்தார். யோகாவின் சிறப்புகள் குறித்து டாக்டர்கள் சண்முகபிரியா, யோகேஸ்வரி ஆகியோர் எடுத்துரைத்தனர். தினமும் யோகா செய்வதால் உடல், மனம் ஆரோக்யம் பெறுகிறது என்று கல் லூரியின் செய்தி தொடர்பாளர் பால்ராஜ் தெரிவித்தார். விழாவில் கல்லூரி ஆலோசகர் மேரியம்மாள் நன்றி கூறினார்.
தேவகோட்டைஅருகேஉள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். யோகாதோன்றியவிதம் பற்றியும், யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி பேசப்பட்டது.
தேவகோட்டை ராம்நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில். பள்ளி தாளாளர் விஜயன் அவர்கள் தலைமையில் யோகா ஆசிரியர் ராமநாதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். தலைமையாசிரியை அமுதா, உதவி தலைமை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிந்தா மணிவஸ்திராணி தலைமை தாங்கினார். தேவகோட்டை மனவளக்கலை மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் இபுராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத் கலந்துகொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியை வெற்றி நன்றி கூறினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா கல்வி மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினம் பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். யோகா ஆசிரியை மோகனப்பிரியா யோகா முத்திரைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார். யோகா பயிற்சி மூலமாக உடலையும் ஆன்மாவையும் சீர்படுத்தலாம் என்று பள்ளி தாளாளர் சத்தியன் பேசினார்.
கோவிலூர் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கோவிலூர் நாச்சியப்ப சாமிகள் கல்லூரி முதல்வர் செல்லப்பா வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மடாலய கல்வி நிறுவனங்களின் மாணவ- மாணவிகள் யோகா முத்திரைகளை செய்து காட்டினார்
மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பள்ளியின் நிறுவன தலைவர் குமரேசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். இதில் ஏர்விங் கமாண்டர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முடிவில் பள்ளி முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.
ஆறாவயல் பரத் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் என்ஜினீயர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழக யோகா ஆசிரியை யோகேஸ்வரி மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை அளித்தார். முடிவில் பள்ளி துணை முதல்வர் அமுதா நன்றி கூறினார்.