search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடியில் திறக்கப்படாமல் உள்ள மீன்மார்க்கெட் கட்டிடத்தை படத்தில் காணலாம்.
    X
    காரைக்குடியில் திறக்கப்படாமல் உள்ள மீன்மார்க்கெட் கட்டிடத்தை படத்தில் காணலாம்.

    காரைக்குடியில் மீன் மார்க்கெட் கட்டிடத்தை திறக்க கோரிக்கை

    காரைக்குடியில் புதிய மீன்மார்க்கெட் கட்டிடத்தை திறக்க பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி நகர் வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. இந்த நகரில் வசிக்கும் மக்கள் வாரந்தோறும் புதன், ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் அதிகஅளவில் அசைவத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் மீன் பிரியர்கள் அதிகஅளவில் உள்ளனர். பொதுவாக காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் மீன்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் ராமேசுவரத்தில் இருந்து வரும்.

    இந்நிலையில் காரைக்குடி பகுதியில் மீன் மார்க்கெட் இல்லாததால் நகர் முழுவதும் ஆங்காங்கே சாலையோரங்களில் தார்ப்பாயை விரித்து வியாபாரிகள் கடை போட்டு நடத்தி வருகின்றனர். இதனால் அவற்றின் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது. இதையடுத்து ஆங்காங்கே போடப்படும் கடைகளை ஒரே இடத்திற்கு கொண்டுவர காரைக்குடி நகரில் மீன் மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இதையடுத்து இந்த கோரிக்கையை ஏற்று காரைக்குடி நகராட்சி வாரச்சந்தை அருகில் தேசிய மீன்வள வாரியம் சார்பில் ரூ.1கோடி மதிப்பீட்டில் மீன்மார்க்கெட்டுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட்டில் மொத்தம் 60 கடைகள் உள்ளன.

    இந்நிலையில் இந்த மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இதனால் சாலையோரத்தில் மீன்கடை போடும் வியாபாரிகள் எண்ணிக்கை வாரந்தோறும் பெருகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மீன்மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். அதன் மூலம் காரைக்குடி நகர் சுகாதார கேடு இல்லாத நகரமாக உருவாகும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×