search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச யோகா தினம்
    X

    சர்வதேச யோகா தினம்

    மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே வான்புரம் மாதா நர்சிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாதா நர்சிங் கல்லூரி முதல்வர் அருள்மணி எஸ்தர் ராணி தலைமை வகித்தார். யோகாவின் சிறப்புகள் குறித்து டாக்டர்கள் சண்முகபிரியா, யோகேஸ்வரி ஆகியோர் எடுத்துரைத்தனர். தினமும் யோகா செய்வதால் உடல், மனம் ஆரோக்யம் பெறுகிறது என்று கல் லூரியின் செய்தி தொடர்பாளர் பால்ராஜ் தெரிவித்தார். விழாவில் கல்லூரி ஆலோசகர் மேரியம்மாள் நன்றி கூறினார்.

    தேவகோட்டைஅருகேஉள்ள புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் முன்னிலை வகித்தார். யோகாதோன்றியவிதம் பற்றியும், யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி பேசப்பட்டது.

    தேவகோட்டை ராம்நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில். பள்ளி தாளாளர் விஜயன் அவர்கள் தலைமையில் யோகா ஆசிரியர் ராமநாதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். தலைமையாசிரியை அமுதா, உதவி தலைமை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிந்தா மணிவஸ்திராணி தலைமை தாங்கினார். தேவகோட்டை மனவளக்கலை மன்றத் தலைவர் ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் இபுராஹிம் வரவேற்றார். கல்லூரி செயலாளர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பரமக்குடி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பிரசாத் கலந்துகொண்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சியளித்தார். முடிவில் உடற்கல்வி ஆசிரியை வெற்றி நன்றி கூறினார்.

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக யோகா கல்வி மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினம் பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் சிவக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். யோகா ஆசிரியை மோகனப்பிரியா யோகா முத்திரைகளை மாணவர்களுக்கு செய்து காட்டினார். யோகா பயிற்சி மூலமாக உடலையும் ஆன்மாவையும் சீர்படுத்தலாம் என்று பள்ளி தாளாளர் சத்தியன் பேசினார்.

    கோவிலூர் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. கோவிலூர் நாச்சியப்ப சாமிகள் கல்லூரி முதல்வர் செல்லப்பா வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் மடாலய கல்வி நிறுவனங்களின் மாணவ- மாணவிகள் யோகா முத்திரைகளை செய்து காட்டினார்

    மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை பள்ளியின் நிறுவன தலைவர் குமரேசன் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். இதில் ஏர்விங் கமாண்டர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். முடிவில் பள்ளி முதல்வர் ரமேஷ் நன்றி கூறினார்.

    ஆறாவயல் பரத் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் என்ஜினீயர் செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்கலைக்கழக யோகா ஆசிரியை யோகேஸ்வரி மாணவ- மாணவிகளுக்கு யோகா பயிற்சிகளை அளித்தார். முடிவில் பள்ளி துணை முதல்வர் அமுதா நன்றி கூறினார். 
    Next Story
    ×