search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன தண்டனை"

    • இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
    • போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கடல் மிகவும் ஆபத்தானது ஆகும். இதை அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்பட பலரும் கடலில் இறங்கி குளிக்கின்றனர்.

    புத்தாண்டு தினத்தன்று கடலில் குளித்த மாணவ-மாணவிகள் 4 பேர் அலையில் சிக்கி பலியானார்கள். அதைத் தொடர்ந்து கடலில் இறங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நாள்தோறும் காலை முதல் மாலை வரை போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று கடலில் இறங்குவதை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

    பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரையில் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில் நேற்று இளைஞர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து வெளியே அழைத்து வந்தனர்.

    அதோடு நிற்காமல், கொளுத்தும் வெயிலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடற்கரை பகுதியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகைகளில் எழுதியுள்ள வாசகங்களை வாசிக்க செய்தனர்.

    சுமார் 1½ கி.மீ. தூரத்துக்கு அவர்களை நடத்தியே அழைத்து சென்று அனைத்து விழிப்புணர்வு பதாகைகளிலும் எழுதியுள்ள வாசகங்களை படித்த பின்னரே அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் இந்த நூதன தண்டனையை கடற்கரைக்கு வந்தவர்கள் வியந்து பார்த்து சென்றனர்.

    • அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாக ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகொடிக்கு தகவல் வந்தது.
    • உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திண்டி வனம் மேல் பேட்டை பகுதியில் இருந்து திண்டி வனத்திற்கு அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்து அட்டகா சத்தில் ஈடுபடுவதாக ரோஷ னை இன்ஸ்பெக்டர் அன்ன கொடிக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து அங்கு சென்ற ரோசனை இன்ஸ்பெக்டர் படிக்கட்டில் தொங்கிகொண்டு வந்த மாணவர்களை கீழே இறங்க சொல்லி இனி நாங்கள் படிக்கட்டில் தொங்க மாட்டோம் எனவும், படிக் கட்டில் தொங்கி அட்டகா சத்தில் ஈடுபட மாட்டோம் என உறுதி மொழி எடுக்கச் சொல்லி இன்ஸ்பெக்டர் நூதன முறையில் தண்டனை வழங்கினார். இனி இது போல் ெதாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

    • வாகன ஓட்டிகள் போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்
    • போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாநகரில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க மாநகர போலீசார் பல்வேறு தடுப்பு நடவ டிக்கைகளை எடுத்து வரு கின்றனர்.

    வாகன ஓட்டிகள் போக்கு வரத்து விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை எடுத்து வருகின்றனர்.மேலும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும், செல்ேபானில் பேசியபடி வாகனங்களை ஓட்டிச் செல்வோர், அதிக வேகமாக செல்பவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் என கண்காணிந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    தற்போது கோவை மாநகர போலீஸ் சார்பில் சாலை போக்குவரத்து வார விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையொட்டில் போலீசார் மாநகரில் உள்ள முக்கிய சிக்னல்களில் முகாம் அமைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலமாகவும், போலீசாரும் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சாய்பாபா காலனி சிக்னலில் போலீசார் முகாம் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் இன்று காலை அந்த வழியாக வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், சீட்பெல்ட் அணியாமலும், சிலர் செல்போனில் பேசியபடியும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சென்றனர்.

    இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முகாமுக்குள் அழைத்து சென்றனர். அங்கு வைத்து அவர்களின் ஓட்டுனர் உரிம விபரம் மற்றும் செல்போன் எண்கள் குறித்த தகவலை பெற்றுக்கொண்டனர். பின்னர் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை உறுதிமொழி எடுக்க வைத்து நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  

    • தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டியதால் நடவடிக்கை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    வேலூர்:

    சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வேலூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலர் குப்பைகளை கொட்டி க வருகின்றனர். குறிப்பாக கொணவட்டம், சதுப்பேரி பகுதிகளில் சர்வீஸ் சாலையோரம் கோழிக்கழிவுகள் அதிகமாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பை கொட்டுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த குழுவினர் பல்வேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கொணவட்டம் பகுதியில் சர்வீஸ் சாலையோரம் ஒருவர் மோட்டார்சைக்கிளில் வந்து குப்பைகளை கொட்டினார். அதை பார்த்த கண்காணிப்பு குழுவினர் அவர் மீது வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் அந்த நபரை அழைத்து விசா ரித்தனர். விசாரணையில், அவர் கொணவட்டம் பகுதியில் கோழி இறைச்சி வியாபாரம் செய்வது தெரியவந்தது. அந்த நபரிடம் கொட்டிய குப்பைகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கொட்டிய குப்பைகளை அந்த நபர் அகற்றினார்.

    இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவது கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது குப்பைகள் கொட் டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×