search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வாரியம்"

    • புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும்.
    • 2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

    குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் தொடர்பாக பொது மக்கள் புகார் தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள மக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 044-45674567, கட்டணமில்லா தொலைபேசி எண் 1916ல் பொது மக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    மேலும், குடிநீர் வழங்கல், கழிவுநீரை அகற்றுதல் தொடர்பாபன புகார் தெரிவிக்க கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுஅறை 24 மணி நேரமும் இயங்கும் எனவும் 300 தூர்வாரும் இயந்திரங்கள், 66 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 176 ஜெட்ராடிங் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    2149 களப்பணியாளர்களுடன், மொத்தம் 542 இயந்திரங்கள் கழிவுநீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
    • தெருக்களுக்கு லாரி விநியோகம் வழக்கம் போல் இடையூறு இல்லாமல் நடக்கும்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோயம்பேடு ரவுண்டானா மேம்பாலத்துக்கு கீழ் உள்ள குடிநீர் பிரதான குழாயில் இணைப்பு பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி (புதன்) காலை 6 மணி முதல் 22-ந் தேதி காலை 6 மணி வரை 2 நாட்கள் அண்ணாநகர், அம்பத்தூர், தேனாம்பேட்டை பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுக் கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், அழுத்தம் குறைவாக உள்ள பகுதிகளுக்கும் குடிநீர் தொட்டிகளில் நீர் நிரப்பப்படும். லாரிகளில் தண்ணீர் சப்ளை நடைபெறும். நிரப்பப்படும். தெருக்களுக்கு லாரி விநியோகம் வழக்கம் போல் இடையூறு இல்லாமல் நடக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
    • லாரிகளை திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து வாடகைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    பருவ மழையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மழையின் போது சாலைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, அதை உடனே அகற்ற மோட்டார்கள், சூப்பர் சக்கர்கள் பயன்படுத்தப்பட்டு கழிவுநீர் லாரிகள் மூலம் அகற்றப்படும். இப்பணிகளில் சென்னை மாநகராட்சி குடிநீர் வாரியம் ஈடுபடும்.

    இந்த நிலையில் சென்னையில் பருவ மழையின் பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடிநீர் வாரியம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி வெள்ளம் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்கான பணிகளில் ஈடுபட ஊழியர்கள், எந்திரங்களை தயார்படுத்தி வருகிறது. தற்போது குடிநீர் வாரியத்திடம் 537 லாரிகள் உள்ளன.

    கூடுதலாக 50 லாரிகளை ரூ.1.43 கோடி செலவில் வாடகைக்கு எடுக்க குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த லாரிகளை திருச்சி, கோவை போன்ற மாவட்டங்களில் இருந்து வாடகைக்கு வாங்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த லாரிகள் மண் அகற்றும் எந்திரங்கள், ஜெட்ரோடர்கள், சூப்பர் சக்கர்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்படும்.

    மேலும் ரூ.15 கோடி முதல் ரூ.17 கோடி வரையில் அதிக குதிரைத்திறன் கொண்ட 50 பம்புகளை வாடகைக்கு எடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

    வெள்ளத்தை எதிர் கொள்வதில் சென்னை மாநகராட்சிக்கு உதவியாக இருப்போம். கழிவுநீர் தடுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மழை காலத்தில் கழிவுநீர் வழக்கமான அளவை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். எனவே கழிவு நீரேற்று நிலையங்கள், மழை நீர் மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்.

    மின்சாரம் துண்டிக்கப் பட்டாலும் டீசல் ஜெனரேட்டர்கள், தண்ணீர் மற்றும் கழிவுநீரை அகற்றுவதற்காக பம்பிங் நிலையங்களை இயக்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தண்ணீரை உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்தவும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரப்பவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டது.
    • மழைக்காலம் தொடங்கினால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    சென்னை:

    சென்னையை அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் 25 கல் குட்டைகளில் மழை நீர் பெருமளவு தேங்கி கிடக்கிறது.

    இந்த தண்ணீரை உறிஞ்சி குடிநீருக்கு பயன்படுத்தவும் மழைக் காலங்களில் தண்ணீர் நிரப்பவும் குடிநீர் வாரியம் திட்டமிட்டது.

    இதன்படி கல்குட்டை தண்ணீரை உறிஞ்சி செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து சென்னையில் குடிநீருக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இந்த பணிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. குவாரிகளில் மிதவை மோட்டாரை அமைத்து அங்கிருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

    தினசரி ஒரு கோடி லிட்டர் வீதம் கடந்த 3 நாட்களில் 3 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது.

    தற்பேதைய கட்டமைப்பு மூலம் தினமும்3 கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்ச வசதிகள் இருப்பதாகவும், ஆனால் ஒரு கோடி லிட்டர் மட்டுமே உறிஞ்சப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்னும் ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் எடுக்கப்படும். இடையில் மழைக்காலம் தொடங்கினால் தண்ணீர் எடுக்கும் அளவு அதிகரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    • குடிநீர் வாரியம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷின் சார்பில், கிராம குடிநீர் மற்றும் சுகா தாரம் மேலாண்மை உறுப் பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    குடிநீர் வடிகால் வாரியம் விருதுநகர் கோட்ட நிர்வாக பொறியாளர் கென் னடி, உதவி நிர்வாக பொறி யாளர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சிவ குமார், வட்டார வளர்ச்சி அலு வலர் மீனாட்சி ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தண்ணீரின் தரம், பாதுகாப்பு, சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங் களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட் டது. பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    • கழிவுநீர் லாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
    • 6 மாதங்கள் ஆகியும் இதுவரை 290 லாரிகளில் 150 லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன.

    சென்னை:

    சென்னையில் கோயம்பேடு, கொடுங்கையூர், பெருங்குடி, நெசப்பாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோட்டூர்புரம், தாடண்டன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 6 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், 16 கழிவு நீர் உந்து நிலையங்களும் உள்ளன. இவை அனைத்தும் 92 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்டவை ஆகும்.

    சென்னையில் தேங்கும் கழிவு நீரை, கழிவு நீர் லாரிகளில் ஏற்றி இங்கு கொண்டு வந்து கொட்டுவதற்கு சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு தினமும் 290 லாரிகள் 1,300 நடை முதல் 1,400 நடை வரை கழிவுநீரை கொட்டுகின்றன.

    ஒரு லாரி கழிவுநீரை கொட்டுவதற்காக சென்னை குடிநீர் வாரியம் ரூ.150 வசூலிக்கிறது. ஆனால் இதையும் மீறி சில லாரிகள் கழிவுநீரை மழைநீர் வடிகால், ஏரி, குளம் ஆகிய இடங்களில் கொட்டுகின்றனர். இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மாசடைகிறது. மேலும் கழிவு நீரை அகற்ற லாரி உரிமையாளர்கள் அதிகமாகவும் கட்டணம் வசூலிக்கின்றனர். 4 கி.மீ. துரத்துக்கு சுமார் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டி ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2500 வரையும் வசூல் செய்கிறார்கள். இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து கழிவுநீர் லாரிகளுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி நீர் நிலைகளில் கழிவுநீர் கொட்டுவதை தடுக்க கழிவுநீர் லாரிகளில் ஜி.பி.எஸ். பொருத்த வேண்டும். ஒரு லாரிக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி 2 ஆண்டுகளுக்கான உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற லாரியை தான் பொதுமக்கள் கழிவு நீரை அகற்ற பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. ஆனாலும் 6 மாதங்கள் ஆகியும் இதுவரை 290 லாரிகளில் 150 லாரிகள் மட்டுமே உரிமம் பெற்றுள்ளன.

    இந்த நிலையில் கழிவுநீர் லாரிகள் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அதை முறைப்படுத்தவும் கழிவு நீர் லாரிகளுக்கு சென்னை குடிநீர் வாரியமே கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி உத்தேசமாக 2 கி.மீ. தொலைவுக்கு ரூ.650 கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. 4 கி.மீ வரை ரூ.850-ம், 8 கி.மீ வரை ரூ.1,100-ம், 12 கி.மீ வரை ரூ.1,300-ம் நிர்ணயிக்க முடிவு செய்து உள்ளது. அதிகபட்சமாக 14 கி.மீ.க்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட உள்ளது.

    மேலும் பொதுமக்கள் குடிநீர் கேட்டு முன்பதிவு செய்வது போல கழிவுநீரை வெளியேற்றவும் லாரிகளை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்காக குடிநீர் வாரிய இணையதளத்தில் தனிப்பகுதி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பதிவு செய்துள்ள லாரிகளை மட்டுமே முன்பதிவு செய்யும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் நீர் நிலைகளில் கழிவு நீர் கொட்டுவதை தடுக்கவும், பொதுமக்களிடம் கழிவு நீர் லாரிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது கழிவு நீரை அகற்றுவதற்கான லாரிகளின் கட்டணம் முறைப்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கட்டணத்தை முறைப்படுத்த லாரி உரிமையாளர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பெருங்குடிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் குடிநீர் வராது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    வேளச்சேரி-தாம்பரம் சாலையில் மடிப்பாக்கம் விரிவான குடிநீர் வழங்கல் திட்டத்திற்கான இணைப்பு பணி, நெம்மேலியில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு குடிநீர் குழாய் இணைப்பு பணி மற்றும் வெட்டுவான் கேணி தேவாலயத்திற்கு எதிரில் துரைப்பாக்கம் திட்ட இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதன் காரணமாக நாளை மறுநாள் 25-ந்தேதி காலை 6 மணி முதல் 26-ந்தேதி காலை 9 மணி வரை பகுதி 13, 14 மற்றும் 15-க்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    அடையாறு பகுதிக்கு உட்பட்ட தரமணி, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மட்டம் தெரு, வேளச்சேரி இந்திரா நகர், பெருங்குடிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் குடிநீர் வராது.

    மேலும் ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, வெட்டுவான் கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்- துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ளலாம்.

    மேலும் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் சீரான முறையில் வழங்கப்படும் என்று குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

    • கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெற வேண்டும்.
    • விண்ணப்பங்கள் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்கவும் முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய நகராட்சி சட்டங்கள் கடந்த மாதம் செயல்பாட்டிற்கு வந்தது.

    அதன் அடிப்படையில் சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே வாரியத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும்.

    கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கோயம்பேடு, தாழங்குப்பம், ஜெய்ஹிந்த் நகர், மணலி நியூ டவுன், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. தாங்கல்கரை, கடப்பா சாலை, ராமச் சந்திரா நகர், தண்டையார் பேட்டை, ஜவகர்நகர், முகப்பேர் மேற்கு, கீழ்ப்பாக்கம், கீரீம்ஸ் சாலை, கங்காநகர், இந்திரா நகர், எல்.ஐ.சி.காலனி, நெசப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 22 இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.

    அதனால் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெற வேண்டும்.

    அதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வதோடு, கண்ட இடங்களில் கழிவு நீரை கொட்டினால் சட்ட விதிகளின்படி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் எச்சரித்து உள்ளது.

    • கழிவுநீர் உந்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
    • சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழையையொட்டி குடிநீரின் தரத்தை உறுதிசெய்ய ஆய்வகம் மூலம் நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. குடிநீரில் குளோரின் அளவு மற்றும் அதில் கலந்துள்ள திடப்பொருள்களின் அளவு குறித்து 3 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப ஆங்காங்கே குளோரின் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற ரசாயன பொருட்கள் தேவையான அளவு வைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரை இறைக்க 16 பெரிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும்

    92 சிறிய நீர் உறிஞ்சும் எந்திரங்கள் குடிநீர் விநியோக நிலையங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    கழிவு நீர் அடைப்பு ஏற்படும் 502 இடங்கள் கண்டறியப்பட்டு, 282 தூர்வாரும் எந்திரங்கள், 125 ஜெட்ராடிங் எந்திரங்கள் 4 சிறிய ஜெட்ராடிங் எந்திரங்கள், 32 ஜெட்ராடிங் மற்றும் உறிஞ்சும் எந்திரங்கள் மற்றும் 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் ஆக மொத்தம் 500 கழிவுநீர் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளது. கழிவு நீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கூடுதலான கழிவுநீர் ஊர்திகள் தேவையிருப்பின் அங்கீகரிக்கப்பட்டவர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் உந்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை ஆய்வு செய்ய அனைத்து பகுதிகளிலும் செயல் பொறியாளர்கள் சிறப்பு அலுவலராக செயல்பட்டு வருகின்றனர் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு குழாய்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. குடிநீர் நீரேற்று நிலையம் மற்றும் கழிவு நீர் உந்து நிலையம் ஆகிய இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் மற்றும் கழிவுநீர் புகார்களை 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா எண் 1916 தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • கடந்த வாரம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள், எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
    • 1425 தெருக்களில் 7345 எந்திர நுழைவு வாயில்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 329 மீட்டர் நீளத்திற்கு பிரதான குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் 15 மண்டலங்களிலும் கடந்த வாரம் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை தெருக்களில் கழிவுநீர் செல்லும் குழாய்கள், எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.

    1425 தெருக்களில் 7345 எந்திர நுழைவு வாயில்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 329 மீட்டர் நீளத்திற்கு பிரதான குழாய்களில் கசடுகள் அகற்றப்பட்டன.

    திருவொற்றியூர் மண்டலத்தில் 116 தெருக்களிலும் மணலியில் 45, மாதவரம் 17, தண்டையார்பேட்டை 134, ராயபுரம் 137, திரு.வி.க.நகர்129, அம்பத்தூர் 115, அண்ணாநகர் 149, தேனாம்பேட்டை 161, கோடம்பாக்கம் 144, வளசரவாக்கம் 51, ஆலந்தூர் 81, அடையாறு 108, பெருங்குடி 10, சோழிங்கநல்லூர் 28 தெருக்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகத்திலும் மற்றும் பணிமனை அலுவலகத்திலும் தொடர்பு கொண்டு தங்களுடைய குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டு உள்ளது.

    • கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை:

    நெம்மேலியில் உள்ள நாள் ஒன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    அதனால் கொட்டிவாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், பாலவாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை ஆகிய பகுதிகளில் நாளை (23-ந் தேதி) காலை 9 மணி முதல் 25-ந் தேதி காலை 9 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    வேளச்சேரி, திருவான்மியூர் பகுதிக்கு 81499 30913, கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பகுதிக்கு 81449 30914, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பகுதிக்கு 81449 30915 ஆகிய எண்களில் அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்று கொள்ள அணுகலாம் என்று சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.

    ×