என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  ஓ.பன்னீர்செல்வம்
  X
  ஓ.பன்னீர்செல்வம்

  குடிநீர்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்த நிலையில், முதன் முறையாக பணியிலிருப்பவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, அதன் ஓய்வூதிய தாரர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி வைத்த அரசு தி.மு.க. அரசு. பணியில் இருப்போரையும், ஓய்வூதியதாரர்களையும் பிரித்துப் பார்த்து அகவிலைப்படி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்றும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படுவதுதான் நடைமுறை என்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியப்பணியாளர்களும், ஓய்வு பெற்றவர்களும் தெரிவிக்கிறார்கள்.

  மேலும், ஓய்வு பெற்ற பெரும்பாலான ஊழியர்கள் வறுமை நிலையில் இருப்பதாகவும், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவிடப்படுகிறது.

  விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில் 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வை இந்த ஆண்டு ஜனவரி மாதம் மூதல் ரொக்கமாக அளித்தால் பேருதவியாக இருக்கும். வயதான காலத்தில் வேறு பணிகளுக்கு செல்ல முடியாத நிலையில் பெரும்பாலானோர் இருப்பதாகவும், பணியில் இருப்போருக்கு வழங்கப்படும்போது ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை இனி வருங்காலங்களில் கடைபிடிக்க வேண்டு மென்றும் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  எனவே, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான 14 சதவீத அகவிலைப்படி உயர்வை பணியில் இருப்போருக்கு வழங்கப்பட்டது போல 1-1-2022 முதல் உயர்த்தி வழங்கவும், பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் இதுபோன்று வழங்கபடாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×