search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ. மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    பள்ளி மாணவ. மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி- கலெக்டர் தகவல்

    • போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பெரிய அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி வருகிற 15-ம் தேதி காலை 7 மணிக்கு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. அங்கு தொடங்கி பாலாஜி நகர், ஈஸ்வரி நகர், மருத்துவ கல்லூரி சாலை வழியாக பிள்ளையார்பட்டி புறவழி ச்சாலை ரவுண்டானா வரை சென்றடைந்து மீண்டும் அதே வழியாக அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் வரை நடத்தப்பட உள்ளது.

    சைக்கிள் போட்டிகள் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், 13 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் நடத்தப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ- மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வந்து விட வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து பெற்ற வயது சான்றிதழ் உடன் வரவேண்டும். சைக்கிள் போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு பரிசுத்தொகையாக தலா ரூ.5000, ரூ.3000, ரூ.2000 வீதமும் 4 முதல் 10-ஆம் இடம் வரை வெற்றி பெறுபவ ர்களுக்கு தலா ரூ.250 வீதமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    எனவே மேற்கண்ட மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா சைக்கிள் போட்டிக்கு தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் அதிக அளவில் பங்கு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×