search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்குவதற்கு திட்டம்-அமைச்சர் தகவல்
    X

    பாம்பன் கடலில் கப்பல் செல்லும் வழியை ஆழப்படுத்துவதற்காக வரைபடத்துடன் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தபோது எடுத்த படம். 

    சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்குவதற்கு திட்டம்-அமைச்சர் தகவல்

    • ராமேசுவரம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
    • பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    ராமேசுவரம்

    புதுச்சேரி, கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து ராமேசுவரத்துக்கு சொகுசு பயணிகள் கப்பல் இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன் பேரில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் இணைந்த பகுதியில் பாம்பன் ரெயில் பாலம் அமைந்து ள்ளது. இந்த பாலத்தில் கப்பல்கள் செல்லும் அளவிற்கு கடலில் தோண்டப்பட்டு தூக்குப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ராமநாத புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர பகுதியின் பொருளா தாரத்தை மேம்படுத்தவும், பாம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கப்பல் செல்லும் கடல் பகுதி வழியாக சுற்றுலா பயணிகள் கப்பல் இயக்கவும், பெரிய சரக்கு கப்பல்கள் இயக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் கடலை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்வத ற்காக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகம் ஆகிய துறை அமைக்க எ.வ.வேலு நேற்று மாைல பாம்பன் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள், கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவர்கள் கடலில் கப்பல் செல்லும் பகுதியில் ஆழப்படுத்துவது தொடர்பாக வரைபட ங்களை வைத்து ஆய்வு செய்தனர்.

    இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாம்பன் பாலத்தில் சுற்றுலா பயணிகள் கப்பல் செல்லும் அளவிற்கு கடலை ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை தொடங்கு வதற்கும் தமிழக அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×