search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தசரா விழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவர்கள் வேடமணிந்து அசத்தல்
    X

    நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பல்வேறு வேடங்கள் அணிந்திருந்த காட்சி.

    தசரா விழாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவர்கள் வேடமணிந்து அசத்தல்

    • மாணவ, மாணவிகள்வேடம் அணிந்து கொலுவாக அமர்ந்திருந்தனர்.
    • டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி அருகே உள்ள சாகுபுரம் கமலாவதி சீனியர் செகன்டரி பள்ளி யின் சார்பில் தசரா விழாவை முன்னிட்டு மத நல்லிணக்க கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் எல்லா மதமும் எம்மதமே, எதுவும் எங்களுக்கு சம்மதமே, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை வலியுறுத்தி மத நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகள் அனைத்து மத கடவுள்கள், தேசிய தலைவர்கள், சாத னையாளர்கள், இசை கலைஞர்கள், விலங்குகள் போன்று வேடம் அணிந்து கொலுவாக அமர்ந்திருந்தனர்.

    பள்ளியின் அறங்காவலரும் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவருமான சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். நந்தினி சீனிவாசன் குத்துவிளக்கு ஏற்றினார்.

    மற்றொரு அறங்காவ லரும் நிறுவனத்தின் பொது மேலாளருமான ராமச்சந்திரன், பள்ளி முதல்வர் அனுராதா, தலைமை ஆசிரியர்கள் சுப்பு ரத்தினா, ஸ்டீபன் பாலாசீர், நிர்வாகி மதன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×