search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை நூலகத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 43 பேருக்கு பரிசு
    X

    போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கிய காட்சி.

    செங்கோட்டை நூலகத்தில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 43 பேருக்கு பரிசு

    • தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் நூலக வாசகா் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் குரூப்-4 தேர்வு, காவலர் தேர்வு என போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாசகா் வட்ட தலைவா் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சிசுந்தரம், வாசகர் வட்ட துணைத்தலைவா் ஆதிமூலம், இணைச்செயலாளா் செண்பகக்குற்றாலம், போட்டித்தேர்வு பொறுப்பாளா் விழுதுகள் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

    தொடர்ந்து செங்கோட்டை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தேசிய திறனாய்வுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற 23 மாணவ, மாணவிகள், குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற 13 மாணவ, மாணவிகள், காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகள், ரெயில்வே தேர்வில் 1 மாணவர் என மொத்தம் 43 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அதிகாரி சுடலை, ஜே.பி.கல்லூரி முதல்வர் ஜான்கென்னடி, அகாடமி இயக்குநர்கள் மாரியப்பன், அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளா் ரமேஷ், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவா் ஜவஹர்லால்நேரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நுாலகர் ராமசாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×