search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரங்களுக்கு வளையல் அணிவித்த கர்ப்பிணிகள்
    X

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரத்தில் கர்ப்பிணிகள் கட்டிய வளையல்கள்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரங்களுக்கு வளையல் அணிவித்த கர்ப்பிணிகள்

    • சாணார்பட்டி ஒன்றியம் கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரங்களுக்கு போட்டு வேண்டிக் கொள்கிறார்கள்.
    • இங்குள்ள மரங்களில் வளையல்களை மாட்டி விட்டால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

    குள்ளனம்பட்டி :

    தங்களுக்கு பிறக்கும் குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்ப தற்காக, வளைகாப்பில் அணிவித்த வளையல்களை சாணார்பட்டி ஒன்றியம் கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மரங்களுக்கு போட்டு வேண்டிக் கொள்கிறார்கள்.

    பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதற்கு பல்வேறு நம்பிக்கைகள் சொல்லப் படுகின்றன. கர்ப்பிணி களுக்கு கைகள் மற்றும் கால்களில் நீர் சுரந்து வீங்கிக் கொள்ளும். ரத்த ஓட்டத்தைத் சீராக தூண்டி விட்டால் இப்படி நீர் சுரப்பது வெகுவாக குறையும்.

    கைகளில் நிறைய வளையல்கள் அணியும் போது, அவை கைகளில் உள்ள நரம்புகளை அடிக்கடி உராய்ந்து ரத்த ஓட்டத்தைத் தூண்டும். இதன் மூலம் நீர்சுரப்பு கட்டுப்படுத்த ப்படும். மேலும் கர்ப்பம் தரித்து 8 மாதங்கள் ஆகிவிட்டால் கர்ப்பிணி பெண்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

    அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அவர்களுக்கு அதிகமாக வளையல் அணிவிக்கப்படு கிறது. இவற்றைத் தவிர, எங்கள் வீட்டு வாரிசை இந்தப் பெண் தனது வயிற்றில் சுமக்கிறாள். ஆகவே தங்கள் வீட்டு பெண் நல்லபடியாக குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று நம்பிக்கை வைத்து வளைகாப்பு நடத்துகிறார்கள்.


    திண்டுக்கல் சாணார்ப ட்டி ஒன்றியம் கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிப் பெண்கள் கை நிறைய வளையல்களோடு தான் வருகிறார்கள். இங்கு அனுமதிக்கப்பட்டதும் வளையல்களை கழட்டி மருத்துவமனையில் உள்ள மரத்திற்கு வளையல் போடுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, வளையல்கள் சேதாரமா னால் பிறக்கும் குழந்தைக்கு ஆகாது. ஆகவே இங்குள்ள மரங்களில் வளையல்களை மாட்டி விட்டால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

    பொதுவாக, வளைகாப்புக்குப் போட்ட வளையல்களை வெளியில் போடவோ உடைக்கவோ மாட்டார்கள். ஆகவே சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையில் மரத்துக்கு வளையல் போட்டு வணங்கும் வழக்கம் இன்று வரை இருந்து வருகிறது என்றனர்.

    Next Story
    ×