என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிவகிரி பேரூராட்சியில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தின உறுதிமொழி
- தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பாக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது
- தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளிசங்கர் ஆலோசனையின் பேரில் வாசுதேவநல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் சுகாதார நிலையங்களில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சிவகிரி:
தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறையின் சார்பாக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளிசங்கர் ஆலோசனையின் பேரில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் அறிவுரை யின்படி, வாசுதேவநல்லூர் வட்டார ஆரம்ப சுகாதார அலுவலகத்தின் கீழ் இயங்கும் ராயகிரி, தென்மலை, தேவிபட்டணம், தலைவன்கோட்டை, வடமலாபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக ரேபிஸ் நோய் தடுப்பு தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதுபோன்று சிவகிரி பேரூராட்சி மன்ற வளாகத்தில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமையில், பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி, சுகாதார ஆய்வாளர் விஷ்ணு குமார், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் சிவகிரி பேரூராட்சி மன்ற அனைத்து கவுன்சிலர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புணர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.