என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாலகிருஷ்ணாபுரம், எம்.வி.எம். நகர் சாலை பணிகளை விரைவுப்படுத்தகோரி உண்ணாவிரத போராட்டம்
  X

  போராட்டத்தில் மாநில குழு உறுப்பினர் பாண்டி பேசியபோது எடுத்த படம்.


  பாலகிருஷ்ணாபுரம், எம்.வி.எம். நகர் சாலை பணிகளை விரைவுப்படுத்தகோரி உண்ணாவிரத போராட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சாலை பணிகளை விரைவுப்படுத்தகோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்

  குள்ளனம்பட்டி:

  திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மற்றும் எம்.வி.எம். நகர் பகுதியில் பல ஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மேம்பாலம் மற்றும் சுரங்கபாதையை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

  நகரச்செயலாளர் அரபுமுகமது தலைமை வகித்து பேசினார். ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆசாத், அஜய்கோஸ், மாநிலகுழு உறுப்பினர் பாண்டி உள்பட நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் கலந்து கொண்டனர்.

  பலஆண்டுகளாக கட்டி முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும், எனவே உடனடியாக இதனை முடிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.

  திண்டுக்கல் கல்லறை தோட்டம் பகுதியில் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×