search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

    ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்- கலெக்டர் தகவல்

    • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது.
    • பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அணையில் இருந்து உபரிநீர் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 50000 கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்டுள்ளது.எனவே காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றுக்கரைகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    காவேரி நீர் பாய்ந்து வரும் காவிரி, வெண்ணாறு, ெகாள்ளிடம் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளில் ெபாது மக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ, மீன் பிடிக்கவோ மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.தண்ணீர் வரத்து அதிகமாகஉள்ள அபாயகரமான இடங்களில் ெபாதுமக்கள் யாரும் தன்படம் (செல்பி எடுப்பதை தவிர்த்திட வேண்டும்.

    கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர் அதிகம் திறந்துவிடப்பட வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளுக்கு குழந்தைகள் விளையாடச் ெசல்லாமல் பெற்றோர்கள் தங்களது குழந்தைளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

    விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர் நிலைகளின் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×