search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கைப்பந்து போட்டி
    X

    நிகழ்ச்சியில் தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அருகில் ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் உள்ளார்.

    பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கைப்பந்து போட்டி

    • ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாக மூட்டினார்.
    • விழாவில் தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர்களையும், மாணவ மாணவியரையும் ஊக்கப்படுத்தும் வகையில் கைப்பந்து, கிரிக்கெட், இறகு பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் ஒன்றியம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக பையர் நத்தம் அம்பேத்கர் கைப்பந்து கழகம் ஏற்பாட்டின் பேரில் கைப்பந்து போட்டி அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதனை ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் தொடங்கி வைத்து மாணவர்களை உற்சாக மூட்டினார்.

    இந்த விழாவில் தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பழனியப்பன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கவுதமன், பொ.மல்லாபுரம் பேரூராட்சி கவுன்சிலர் கோகுல்நாத், ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×