search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுதந்திர தினத்தையொட்டி  ரெயில் நிலையங்களில்   போலீஸ் கண்காணிப்பு  பார்சல்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு
    X

    சுதந்திர தினத்தையொட்டி ரெயில் நிலையங்களில் போலீஸ் கண்காணிப்பு பார்சல்கள் கொண்டு செல்ல கட்டுப்பாடு

    • சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.
    • நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில், ஆக.12-

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

    சுதந்திர தினவிழா

    கலெக்டர் அரவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணி யாற்றிய அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடக்கிறது.

    மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி மற்றும் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இரண்டாவது நாளான இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்கவர் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடை பெற்றது.

    1200 போலீசார்

    சுதந்திர தினத்தை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட் டுள்ளனர்.

    கன்னியாகுமரி, நாகர் கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரத் தில் ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் பிளாட்பா ரங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ெரயில்வே தண்டவாளங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ெரயில்வே பாலங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு பிறகு அனுப்பப்பட்டு வருகிறது. வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் பார்சல்களையும் போலீ சார் சோதனை செய்து வருகிறார்கள். பார்சல் கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளது.

    கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ெரயில் நிலையத்திலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×