என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    மயிலாடுதுறையில் காவிரி புஷ்கர புனித நீராடல் நாளை தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு மாறும் காலமாகும். இது காவிரி புஷ்கர விழாவாக கொண்டாடப்படுகிறது.

    144 ஆண்டுகளுக்கு பின்பு இது போன்ற விழா காவிரியில் கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந் தேதி வரை நடைபெறும் இவ் விழாவில் கலந்து கொண்டு பக்தர்கள் புனித நீராடினால் பிதுர்தோ‌ஷம், ஹத்தி தோ‌ஷம், நதி தோ‌ஷம் நீங்கி வறுமை, பஞ்சம் அகன்று வாழ்க்கை செழுமையடையும்.

    உலகம் சுபிட்சம் பெறும். மேலும் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணங்கள் கொடுத்து பாவத்தை தீர்த்து கொள்ளலாம். இந்த 12 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் காவிரியில் புனித நீராடினால் 3½ கோடி தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகள் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள ஐப்பசி (துலாம்) மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் 30 நாட்கள் தங்கி புனித நீராடி தங்கள் பாவங்களை போக்கி கொண்டது என்பது ஐதீகமாக உள்ளது.

    மயிலாடுதுறை துலாக்கட்டம் காசிக்கு இணையான தலமாக கருதப்படுகிறது. இங்கு பக்தர்கள் நீராடுவ தவற்கு ரி‌ஷப தீர்த்த மண்டபத்தை சுற்றி 100 மீட்டர் நீளத்தில் நீர் தேக்கம் அமைக்கப்பட்டு போர்வெல் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.

    இந்த பணியின் போது கண்டு பிடிக்கப்பட்ட 12 கிணறுகள சீரமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாள் விழாவிலும் சிறப்பு ஹோமங்கள்,வேத பாராயணம், திருமுறைகள், கவியரங்கம், மங்கல ஆரத்தி, கலச பூஜை, ஆன்மீக ஊர்வலம், ஆன்மீக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.



    தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம் வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி ஆகியவை பஞ்ச மூர்த்திகளுடன் காவிரியின் இரு கரைகளிலும் நாளை எழுந்தருளி காலை 8.25 மணிக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள், ஆதீன கர்த்தர்கள், மடாதிபதிகள், துறவியர்கள் மற்றும் பக்தர்கள் புனித நீராடுகிறார்கள்.

    விழாவை சிறப்பிக்கும் வகையில் துலாக்கட்டம் தெற்கு கரை அரசமரத்தடியில் 7½ அடி உயரம், 1½ டன் எடையுள்ள காவிரி அம்மன் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.சிவபுரம் வேதாசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு ஹோமங்கள்செய்யப்பட்டு சிலைக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பாதுகாப்பு பணியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் தலைமையில் 900 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். கண்காணிப்பு கேமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல ஐ.ஜி. வர தராஜூலு ஆய்வு செய்தார்.

    4 இடங்களில் வாகன நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது.25 இடங்களில் நவீன கழிவறை வசதி செய்யப்பட்டு உள்ளது. புஷ்கர விழாவில் புனித நீராட மயிலாடுதுறையில் பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.
    ஜி.எஸ்.டி வரியை எதிர்க்க அனைத்து வியாபாரிகளும் தயாராக வேண்டும் என்று சீர்காழியில் விக்கிரமராஜா பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டதலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். சீர்காழி வர்த்தக சங்க தலைவர் சிவசுப்ரமணியன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

    சென்னையில் தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். திண்டுக்கலில் வாரம் இருமுறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு பசுமையாக காணப்படுகிறது. வருகின்ற 26-ந் தேதி மாநில நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது. இதில் மாநிலத் துணைத்தலைவராக சிவசுப்ரமணியன் தேர்வு செய்யப்பட இருகிறார். ஜி.எஸ்.டி. கணக்கு சமர்ப்பிக்க இரண்டு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் கணக்களை வழங்கவில்லை என்றால் 200 சதவீதம் அபராதம் வசூல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி வரி விதிப்பது தொடர்பாக வர்த்தகர்களை அழைத்து பேசவில்லை. வறுத்த வேர்கடலைக்கு 15 சதவீதம் வரி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பிற்கு 5 சதவீதம் வரி. வெளிநாட்டு உணவு பொருட்களுக்கு பர்கர் பீசாவிற்கு 5 சதவீதம் வரி உள்நாட்டு உணவு பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

    ஒருவருடத்திற்கு 20 லட்சத்திற்குள் வியாபாரம் செய்பவர்களுக்கு ஜி.எஸ்.டி. தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் வியாபாரம் செய்தால் அரசு சேல்ஸ் டாக்ஸ் கணக்கில் வந்துவிடும் அப்படி வந்தால் 300 சதவீதம் அபாராதமும், ஜெயில் தண்டனையும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 லட்சம் வரை வரி கிடையாது என்பதை மாற்றி 50 லட்சமாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். ஜி.எஸ்.டி வரியை எதிர்க்க அனைத்து வியாபாரிகளும் தயாராக வேண்டும். காலாவதியான பொருட்களை தனியாக வைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கு பல கோடிரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 60 வயது முடிந்த வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். விபத்துக்கள் ஏற்பட்டால் வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் துரைராஜன், ஹரக்சந்த், கியான்சந்த், அன்வர்அலி, செயற்குழு உறுப்பினர் சோலை, தமிழ்ச்செல்வம், சாமிராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    வேளாங்கண்ணியில் இன்று மாலை பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் மதியம் 12 மணிக்கு கொடி ஏற்றுதலும், இரவு 9 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.

    கோவில் வளாகம், கடற்கரை, பழைய கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) மாதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தலைஞாயிறு அருகே கார் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தலைஞாயிறு:

    தலைஞாயிறு அருகே உள்ள பிரிஞ்ச மூலை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தொழிலாளி.

    இவர் சைக்கிளில் கடை வீதிக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வீடு நோக்கி சென்றார். அவர் தலைஞாயிறு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான தட்சிணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் தொழிலாளி மீது மோதிய கார் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது என்பதும், அதனை முருகதாஸ் என்பவர் ஓட்டிவந்தபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக தலைஞாயிறு போலீசார் வழக்கப்பதிவ செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    இந்த விபத்து தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேதாரண்யம் மீனவர்களின் மீன்களை இலங்கை மீனவர்கள் பறித்து சென்றனர். இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மயில் வாகனன். இவருக்கு சொந்தமான படகில் செல்வமணி, கோவிந்தன், ரவிகுமார், செல்வகுமார், வெற்றிவேல் ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இதே போல் சசிகுமார் என்பவருக்கு சொந்தமான படகில் ஆனந்தன், கலைமாறன், கதிரவன், சரவணன் ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

    அவர்கள் கோடியக்கரைக்ககு தென்கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை மீனவர்கள் அங்கு வந்தனர்.

    இலங்கை கடற்படையினர் வேதாரண்யம் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் இரும்பு குண்டுகளால் தாக்கினார்கள்.

    அப்போது இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலைகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள மீன்களை பறித்து கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    மீன்கள், வலைகளை பறி கொடுத்த வேதாரண்யம் மீனவர்கள் வெறுங்கையுடன் கரைக்கு திரும்பினார்கள். இது குறித்து கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இலங்கை கடற்படை, மீனவர்கள் தாக்குதலுக்கும் இலங்கை மீனவர்கள் மீன்களை பறித்து செல்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேதாரண்யம் மீனவர்கள் கூறினர்.

    சுவர் இடிந்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலியானர்கள். இச்சம்பவம் குத்தாலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை செக்கடி கீழத் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (42). விவசாய கூலி தொழிலாளி.

    இவரது மனைவி கார்த்திகா (34). இவர்களுக்கு வர்ஷினி (11), சாதித்யா (7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெங்கட்ராமன் தனது வீட்டை விரிவாக்கம் செய்து வந்தார். இதற்காக புதிய சுவர் கட்டப்பட்டு வந்தது.

    நேற்று இரவு அவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பழைய சுவர் இடிந்து விழுந்தது. இதில் வெங்கட்ராமன், கார்த்திகா, வர்ஷினி, சாதித்யா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர்.

    அவர்களில் வெங்கட்ராமன், கார்த்திகா, சாதித்யா ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். வர்ஷினி பலத்த காயத்துடன் முனகி கொண்டிருந்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    கையில் பலத்த காயம் அடைந்த அவரை மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேர் உடல்களையும் தாசில்தார் திருமாறன் பார்வையிட்டார்.

    பின்னர் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுவர் இடிந்து 3 பேர் பலியான சம்பவம் குத்தாலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    துறைமுக பகுதியில் கலவரத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து நாகையில் இயல்பு நிலை திரும்பியது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் துறைமுகத்தில் மீன் இறங்கு தளத்தில் மீன் இறக்குவது தொடர்பாக அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகர் மீனவ கிராமங்களிடையே நிலவி வந்த பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் இரவு துறைமுக பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவானது.

    இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். மோதலில் 27 பேர் காயம் அடைந்தனர். இரு சக்கர வாகனங்கள், படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    சில இரு சக்கர வாகனங்கள் கடலில் தூக்கி வீசப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி நம்பியார் நகர் மீனவர்கள் நாகையில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களில 135 பெண்கள் உள்பட 509 பேரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

    அப்போது ஒரு பெண் மயங்கி விழுந்தார். அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறியல் காரணமாக நேற்று நாகையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.

    மறியலில் ஈடுபட்டு கைதானவர்கள் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர். இதனால் நாகையில் இயல்பு நிலை திரும்பியது. இன்று காலை வழக்கம் போல் கடைகள் திறந்து இருந்தது.

    அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    நீட் தேர்வுக்கு வாக்குறுதி கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று காவிரி உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வலியுறுத்தி உள்ளார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் காவிரி உரிமை மீட்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:-

    தற்பொழுது இருக்கும் அரசு மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யவில்லை. 5-ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலையில் 6-வது ஆண்டாக சம்பா சாகுபடியும் இந்த ஆண்டு செய்ய முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

    காவிரியிலிருந்து தண்ணீர் பெற்றுத் தர தமிழக அரசு முன் வரவில்லை. எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடி பகட்டை காண்பிக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை காட்டிலும் போலீஸ் பாதுகாப்பை அதிகம் போட்டு கூட்டத்தை நடத்தி தனது செல்வாக்கை உயர்த்த பாடுபடுகிறார். டெல்டா மாவட்டத்திற்கு வரும் முதல்வர் விவசாயிகளை கண்டுகொள்வதில்லை.

    மாணவி அனிதா தற்கொலையில் முதல் குற்றவாளி மத்திய அரசு. இரண்டாவது குற்றவாளி மாநில அரசு. அனிதாவின் தந்தை, அரசு அறிவித்த 7 லட்சம் ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டார். வாக்குறுதி கொடுத்த ஏமாற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும். எடப்பாடி பழனிச்சாமியும் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீட் தேர்வில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25-லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமீமுன் அன்சாமி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்தார். அப்பொழுது நீட் தேர்வில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25-லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.

    மேலும் 50 எம்.பி.களை வைத்திருக்கும் தமிழக அரசு மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்நிகழ்வுக்கு மத்திய அரசும் மாநில அரசுமே முழுப் பொறுப்பு. அனிதாவின் மரணமே முதலும் கடைசியாகவும் இருக்க வேண்டும் என்றுகூறினார்.

    சீர்காழி அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி உடலை மீட்ட போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி ரெயில் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிதம்பரம் செல்லும் தண்டவாளத்தில் இன்று காலை ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தனர்.

    வாலிபர் 2 கால்களும் துண்டான நிலையிலும், பெண் தலை துண்டித்த நிலையிலும் இறந்து கிடந்தனர். இந்த நிலையில் காலை அந்த வழியாக நடைபயிற்சி செல்பவர்கள் 2 பேர் ரெயில் மோதி பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    உடனே இது குறித்து சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை ரெயில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் பலியானவர்கள் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் மடவாமேடு சாலையில் வசிக்கும் இளங்கோவன் மகள் இந்துமதி(வயது 17), பழைய பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் தினகரன் (17) என்று தெரிய வந்தது. இவர்கள் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தனர். வீட்டில் இருந்து நேற்று மாயமான இவர்கள் அதே பகுதியில் உள்ள ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்கள் காதல் ஜோடிகளா? அவர்கள் தற்கொலைக்கு என்ன காரணம்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



    நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் மற்றும் மயிலாடுதுறை ஒன்றியங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வரும் சாலை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பாலம் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.

    தரங்கம்பாடி- மயிலாடுதுறை சாலையில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும், மயிலாடுதுறை-பட்டவர்த்தி சாலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகளையும், கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு, சாலைகளின் வளைவுகளில் எச்சரிக்கைக் குறியீடுகள் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    மாப்படுகை-கடலங்குடி இணைப்புச் சாலையில் மண்ணியாற்றின் குறுக்கே ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பாலம் திரும்பக் கட்டும் பணிகளை பார்வையிட்ட கலெக்டர் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பாலத்தினை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி, உதவி கோட்டப் பொறியாளர் (மயிலாடுதுறை) ராஜேந்திரன், உதவி கோட்டப் பொறியாளர் (சீர்காழி) சூரியமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், தாசில்தார் காந்திமதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் கொல்லித் தீவு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 28). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முருகேசன் வேதாரணயத்தில் உள்ள ஒரு கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார். அதே தெருவில் பக்கத்து வீட்டில் செல்வகுமார்(35) மனைவி சுதாவுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 26-ந்தேதி காலை மாரியம்மாள் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தபோது அங்கு வந்த சுதா, மாரியம்மாளிடம் உன் போட்டோ என் கணவர் சட்டைப்பையில் எப்படி வந்தது எனக் கேட்க, இதில் ஏற்பட்ட தகராறில் கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்களாம். இதில் மனமுடைந்த மாரியம்மாள் வீட்டிற்கு சென்று எலி மருந்தை சாப்பிட்டு விட்டார். அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திரூவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அறிவழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயேந்திரசரஸ்வதி, கார்த்திகேயன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் மாரியம்மாள் இறந்ததை அறிந்த செல்வகுமாரும் நேற்று வி‌ஷம் குடித்து விட்டார். செல்வகுமாரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×