என் மலர்
செய்திகள்

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்-அரசு வேலை வழங்க வேண்டும்: தமீமுன் அன்சாரி பேட்டி
நீட் தேர்வில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25-லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமீமுன் அன்சாமி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்தார். அப்பொழுது நீட் தேர்வில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.25-லட்சமும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும்.
மேலும் 50 எம்.பி.களை வைத்திருக்கும் தமிழக அரசு மத்திய அரசிற்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். இந்நிகழ்வுக்கு மத்திய அரசும் மாநில அரசுமே முழுப் பொறுப்பு. அனிதாவின் மரணமே முதலும் கடைசியாகவும் இருக்க வேண்டும் என்றுகூறினார்.
Next Story






