search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Federal Minister"

    பெங்களூருவில், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறியுள்ளார். #Parameshwara
    பெங்களூரு :

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா பெங்களூரு விகாச சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சிமெண்டு சாலைகளை அமைப்பது, சாலை குழிகளை மூடுவது, குப்பை பிரச்சினையை தீர்ப்பது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் கங்காம்பிகே, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்ட்னர். இந்த கூட்டத்திற்கு பிறகு பரமேஸ்வர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளின் பணியில் குறைகளை கண்டறிந்து, கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் சாலை குழிகளை மூடும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டு, 27-ந் தேதிக்குள்(நாளை) நகரில் சாலைகளில் உள்ள அனைத்து குழிகளையும் மூட வேண்டும்.

    சாலை குழிகள் மூடியது குறித்த ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். சாலைகளை மூட தவறினால் சம்பந்தப்பட்ட மண்டல இணை கமிஷனரே அதற்கு பொறுப்பாவார். சாலைகளை தரம் உயர்த்த, ‘டெண்டர் சூர்‘, சிமெண்டு சாலைகள் அமைக்கும் திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வருகிற மே மாதத்திற்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    100 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.945 கோடி செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சில சாலைகளில் கடுமையான போக்குரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் அத்தகைய சாலைகளில் இந்த சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடையாமல் உள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.665 கோடி செலவில் 63 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகளுக்கான டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது. இதில் 41 சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

    குப்பையை அகற்றும் பணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக டெண்டர் விடவில்லை. இப்போது அதற்கு டெண்டர் விட முடிவு செய்துள்ளோம். குப்பைகளை அகற்றும் எந்திரங்களை ஒப்பந்ததாரர் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டு 10 மாதங்களுக்குள் பணிகள் முடி வடைந்து அமல்படுத்தப்படும்.

    தெருக்களில் எல்.இ.டி. விளக்குகளை பொருத்த டெண்டர் பணிகள் முடிவடைந்துவிட்டன. மந்திரிசபையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும். அரசு-தனியார் பங்களிப்பில் ரூ.800 கோடியில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது. சுதந்திர பூங்காவில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டிட பணிகளை விரைவாக முடிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். ஜே.சி.ரோட்டிலும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் கூடுதலாக 2 மாடிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு மாநகராட்சியை பிரிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. பெங்களூருவுக்கு என்று தனி சட்டத்தை இயற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. துப்புரவு தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதாவது பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு பரமேஸ்வரா கூறினார். #Parameshwara
    தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #ThoothukudiShooting
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அமைதியாக போராடி கொண்டு இருந்த மக்களிடையே மிகப்பெரிய கலவர சூழ்நிலை உருவாகி 13 உயிர்கள் பறிபோய்விட்டது. மத்திய அரசு துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கியதாக பொய்யான பிரசாரங்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம்.



    ஸ்டெர்லைட் ஆலையை பா.ஜனதா அப்போதே எதிர்த்தது. அந்த ஆலைக்கு எதிராக 95-96-ம் ஆண்டுகளில் பல போராட்டங்களை நடத்தினேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டேன். இந்த ஆலையை கொண்டு வர முழு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் தான்.

    ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ். மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஆகியோரும் இதற்கு அனுமதி வழங்கியதில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சொல்லி நடந்ததாக ராகுல்காந்தி கூறுகிறார். சோனியாகாந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் நடந்த துரோகங்கள் எண்ணில் அடங்காது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளன.

    கடந்த 99 நாட்களாக நடந்த போராட்டங்களில் எந்த சம்பவமும் நடக்காமல், 100-வது நாளில் கலவரம் எப்படி நடந்தது. இதில் பங்கேற்ற தீய சக்திகள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கு எந்த திட்டமும் வரக்கூடாது என்று சில கூட்டம் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக கூறிய போதும், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

    ஆஷ்துரைக்கு வீரவணக்கம் என்று ஆங்கிலேயருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆள்வதற்கு தமிழக அரசுக்கு தகுதி இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishnan #ThoothukudiShooting

    ×