என் மலர்
செய்திகள்

தலைஞாயிறு அருகே கார் மோதி தொழிலாளி பலி
தலைஞாயிறு:
தலைஞாயிறு அருகே உள்ள பிரிஞ்ச மூலை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. தொழிலாளி.
இவர் சைக்கிளில் கடை வீதிக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு வீடு நோக்கி சென்றார். அவர் தலைஞாயிறு பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சென்ற போது அந்த வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தலைஞாயிறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான தட்சிணாமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் தொழிலாளி மீது மோதிய கார் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பால சுப்பிரமணியத்துக்கு சொந்தமானது என்பதும், அதனை முருகதாஸ் என்பவர் ஓட்டிவந்தபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக தலைஞாயிறு போலீசார் வழக்கப்பதிவ செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
இந்த விபத்து தலைஞாயிறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






