என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து கருப்பு சட்டை அணிந்தப்படி மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.
    சீர்காழி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி முக்கொம்பில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் மு.க.ஸ்டாலின் பயணத்தை தொடர்ந்தார். வழிநெடுக கிராமங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    நாகை மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். நாகை வேளாங்கண்ணியில் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பரவை, பாப்பா கோவில், சிக்கல் பத்து, அகரஒரத்தூர், ஒரத்தூர், ஆயில்மலை, அகலங்கால், செம்பியன் மாதேவி, வடுகசேரி , புதுச்சேரி, ஆவராணி, சிக்கல், புத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். செம்பியன்மா தேவியில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    மாலையில் காரைக்காலில் தொடங்கிய பயணம் பொறையாறு, திருக்களச்சேரி, , எடுத்துக் கட்டி, இலுப்பூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு சென்றது. இரவில் வைத்தீஸ்வரன்கோவிலில் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் தங்கினர்.

    இன்று (12-ந் தேதி) காலை 9 மணியளவில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து மு.க.ஸ்டாலின் 6-வது நாளாக பயணத்தை தொடங்கினார்.

    அவருடன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.


    சென்னைக்கு இன்று வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த காவிரி மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை- கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். இதேபோல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்பு சட்டை , பேட்ஜ் அணிந்து கொண்டு சென்றனர்.

    வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து தொடங்கிய பயணம் கொள்ளிடம், வல்லம்படுகை வழியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, செல்கிறது.

    இன்று மாலையில் கடலூரில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின், இரா.முத்தரசன் மற்றும் காவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவில் இடம் பெற்றிருந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பால கிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    நாளை (13-ந் தேதி) காலை 7 மணியளவில் கடலூரில் இருந்து 1000 கார்களுடன் மு.க.ஸ்டாலின் பேரணியாக செல்கின்றனர்.

    கடலூரில் இருந்து புதுச்சேரி, திண்டிவனம், அச்சரப்பாக்கம், மேல் மருவத்தூர், தாம்பரம் வழியாக கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்கின்றனர். அங்கு கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனு கொடுக்கின்றனர். #MKStalin #CauveryIssue
    காவிரி உரிமை மீட்பு நடைபயணம் அரசியல் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
    சீர்காழி:

    காவிரி உரிமை மீட்பு நடைபயணத்தின் 6-வது நாளான இன்று வைத்தீஸ்வரன் கோவிலில் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி உரிமை மீட்பு நடைபயணம் திருச்சி முக்கொம்பில் தொடங்கிய நாள் முதல் வழி நெடுங்களிலும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர். இந்த நடைபயணம் பொதுமக்களிடையே தன்னெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல் ரீதியாக மத்திய அரசை வலியுறுத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சியின் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும். காவிரி உரிமை மீட்பு நடைபயணம் அரசியல் மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.

    தமிழகம் தற்போது கடுமையான கடனில் சிக்கி பின் தங்கியுள்ளது. எனவே அரசியல் மாற்ற ஏற்பட வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் மாநில உரிமையை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டு கொடுத்து இருக்கமாட்டார். ஆனால் அம்மா பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் தெரிந்தே உரிமையை விட்டு கொடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி த.மா.கா. சார்பில் சீர்காழியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    சீர்காழி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். நகர தலைவர் கனிவண்ணன், வட்டார தலைவர்கள் பண்டரிநாதன், சுந்தரவடிவேலு, வட்டார இளைஞர் அணி தலைவர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசை கண்டித்து பொதுமக்களிடம் கையெழுத்துகள் பெறப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் தம்பிதுரை, சின்ன மரைக்காயர், கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொள்ளிடம், புதுப்பட்டினம், பழையார், வைத்தீஸ்வரன்கோவில், புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    நாகப்பட்டினம்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நாகை அவுரித்திடலில் இந்து ஆதியன் பழங்குடியின மக்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் சாமிநாதன், துணை தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி கலந்துகொண்டு பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் செல்லூர், நீலப்பாடி, பொறக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இந்து ஆதியன் பழங்குடி இன மக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முன்னாள் தலைவர் பிச்சை நன்றி கூறினார்.
    தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்று மயிலாடுதுறையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
    மயிலாடுதுறை:

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    திருடர்களை பிடித்தால் கூட பொதுமக்கள் விட்டு விடுவார்கள். ஆனால் சர்ச்சை கருத்துக்களை கூறிவரும் தமிழிசை, எச்.ராஜா போன்றவர்களை கண்டால் அவர்களை தாக்கமால் விடமாட்டார்கள். எனவே அவர்கள் தேவையற்ற கருத்துகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.


    பெரியார் சிலை உடைப்பு குறித்து அவரது பேரனான நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அதை மக்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன். மோடியை நல்லாட்சி தரும் மன்னராக கருதி மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் அவர் நாட்டை கவனிக்காமல் உலகம் முழுவதும் நாடோடியாக சுற்றி கொண்டு இருக்கிறார்.

    மத்திய அரசு வழங்கிய இலவச கியாஸ் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு மானியம் வழங்காதது கண்டிக்கத்தக்கது.

    இப்போது மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்கள் தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    தமிழ்நாட்டில் நாடக ஆட்சிதான் நடக்கிறது என்று சீர்காழியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசினார்.

    சீர்காழி:

    சீர்காழி நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் சீர்காழி பழையபேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா.முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் சசிக்குமார், ரவிக்குமார், மலர்விழி, நகர துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் எம்.என்.ஆர்.ரவி, மாவட்ட அமைப்பாளர்கள் முத்து குபேரன், கலைவாணன்,மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், விஜயேஸ்வரன், முருகன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்றார்.

    மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம்.கல்யாணம், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கட்சியினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசும்போது கூறியதாவது:-

    வளர்கிற இளைஞர்களுக்கு திராவிட இயக்க உணர்வுகளை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்திலே இளைஞர் எழுச்சிநாள் விழா கொண்டாடப்படுகிறது. இளைஞர்களுக்கு இளமையிலேயே அரசியல் உணர்வு வரவேண்டும். மாணவர்கள் அரசியலில் சுவற்றில் அடித்த பந்தாக இருக்கவேண்டும், சேற்றில் அடித்த பந்தாக இருக்ககூடாது என கருணாநிதி அப்போதே கூறியுள்ளார்.அவ்வாறு மாணவர்கள், இளைஞர்கள் அரசியலை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    தற்போது சிலர் நான் தான் அடுத்த முதல்வர் என்ற கனவோடு அரசியலுக்கு வருகின்றனர். திராவிட இயக்கம் கொடுத்த உணர்வுகளின் அடிப்படையில்தான் பெண்கள் படித்தார்கள். பெண்களுக்கு சொத்துரிமை, சமஉரிமை,தேர்தலில் 33சதவீத இடஒதுக்கீடு கிடைத்திட காரணம் திராவிட இயக்கம் தான். தற்போது மருத்துவஇடங்களில் நீட் தேர்வு மூலம் தமிழ்நாட்டில் வட இந்தியர்களை திணிக்கும் நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் ஒரே இயக்கம் திமுகதான். நீட்தேர்வை, ஜல்லிகட்டு ஆகிய பிரச்சனைக்கு உணர்வுடன் போராடிய மாணவர்கள் காவிரி நதிநீர் பிரச்சனைக்கும் போராடவேண்டும்.

    தமிழ்நாட்டில் நாடக ஆட்சிதான் நடக்கிறது. சட்டமன்றத்தில் காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க நிறைவேற்றிய தீர்மானத்தை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்து கையெழுத்து பெற்றால் தான் மத்தியஅரசிற்கு அழுத்தம் தரமுடியும். மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலகெடு முடிவடைந்த பிறகு தற்போது மத்திய அரசு ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றத்தை மிக தாமதமாக நாடுவது மக்களை ஏமாற்றும் செயல்.

    பா.ஜ.க. என்றைக்கும் தமிழகத்தில் நுழைய முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி ஆளுனருக்கு எந்த அதிகாரமும் கிடையாது ஆனால் தமிழகத்தில் ஆளுனர் மாவட்டங்களை ஆய்வு செய்கிறார். தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் நியாயமாக நடக்கவில்லை என்று பேசினார்.

    முடிவில் நகர இளை ஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.

    புதுச்சேரியில் இருந்து சீர்காழிக்கு சொகுசு காரில் சாரயம் கடத்தியது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள சாராய கேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியில் புதுச்சேரி மாநில சாராயம் எடுத்து செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முத் சஞ்சய் சேகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு தனிபிரிவு டி.எஸ்.பி. சாமிநாதன் தலைமையில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    இதைத்தொடர்ந்து மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சீர்காழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்னர்.

    அப்போது சீர்காழி அடுத்த வருசபத்து என்ற பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக ஒரு சொகுசு கார் வேகமாக வந்தது. அப்போது போலீசார் அந்த காரை மறித்து சோதனை செய்தனர்.

    இதில் அந்த காரில் புதுச்சேரி மாநில சாராயம் 10 கேன்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இதை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சீர்காழி ஞான சம்பந்தம் தெருவை சேர்ந்த குமார் (வயது 42), மங்கை மடம் பகுதியை சேர்ந்த கண்ணன் (39) ஆகியோர் புதுச்சேரியில் இருந்து சாராய கேன்களை சீர்காழி அடுத்த ஓதவந்தான்குடி பகுதியை சேர்ந்த குணசுந்தரி (36) என்பவர் வீட்டிற்கு எடுத்து செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் குமார், கண்ணன் மற்றும் குணசுந்தரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். சாராயம் எடுத்து வந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    திருவெண்காடு அருகே கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ததை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்காடு:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை சேர்ந்த 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இதனிடையே மேற்கண்ட கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றால் பெருந்தோட்டம் பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும், அதனால் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் முருகுபாண்டியன் அறிவித்தார்.

    இந்த நிலையில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் நேற்று பெருந்தோட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துமகேந்திரன், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் ரவி, விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் முத்தமிழ் வரவேற்றார். இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.  #tamilnews
    திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா அண்டர்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகிளி. விவசாயி. இவரது மனைவி அன்புச்செல்வி இவர்களது மகள் பிரதிபா (வயது 21) ஆசிரியர் பட்டயப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பிரதிபாவிற்கும், திருத்துறைப்பூண்டி அடுத்த ஒருவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.

    இந்நிலையில் வாய் மேட்டைச் சேர்ந்த முருகையன் மகன் கார்த்தி என்பவர் பிரதிபாவை கடத்தி சென்று விட்டதாக அன்புச்செல்வி வேதாரண்யம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட பிரதீபாவை தேடிவருகின்றனர். பிரதீபாவும் கார்த்தியும் கடந்த ஓராண்டாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

    காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று நெய்வேலி, கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது என பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார். #Cauveryissue

    மயிலாடுதுறை:

    மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது. இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. 17 நாட்களாக தமிழக எம்.பி.க்.கள் பாராளுமன்றத்தை முடக்கியுள்ளனர்.

    இது வரை மேலாண்மை வாரியத்தை பற்றி வாய்திறக்காத மத்திய அரசு தற்போது தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எதுவும் தெரியாதது போல் கேட்கிறது.

    இந்த விவகாரத்தில் காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் இருக்க சட்டத்தில் என்ன ஓட்டை உள்ளது என்று மத்திய அரசு தேடுகிறது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு திரட்டிய ஜக்கி வாசுதேவ், விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்று நியூயார்க்கில் பேசியது கண்டிக்கத்தக்கது. நதிகள் இணைப்பு என்பது ஆறுகளை பறித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் திட்டமாகும்.

    பன்னாட்டு நிறுவனங்கள் ஆறுகளில் குழாய்கள் அமைத்து ஆற்று நீரை விற்கும் நிலை ஏற்படும். அதை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்படுவார்கள்.

    தமிழகத்தில் காவிரி பிர்ச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று நெய்வேலி, கூடங்குளம் மின்சாரத்தை தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வழங்கக் கூடாது. எண்ணெய் கிணறுகள் அமைப்பதை தடுத்து நிறுத்த மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்.

    தமிழக மக்கள் நலனை பற்றி மத்திய அரசு ஒரு போதும் கவலைப்படாது. தமிழகத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இயற்கை வளங்கள் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகை விவசாயிகள் மரத்தில் தூக்குமாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #CauveryIssue #CauveryManagementBoard
    நாகை:

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுவதாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நாகை புதிய பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மரத்தில் தூக்குமாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகளை கைது செய்தனர். #CauveryIssue #CauveryManagementBoard

    கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேட்டை கண்டித்து வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா அகஸ்தியன்பள்ளியில் மூவாயிரம் ஏக்கரில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சுமார் மூவாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.

    இந்த உப்பளத் தொழிலாளர்களுக்கென வேதாரண்யம் வடக்குவீதியில் வேதாரண்யம் உப்பளத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் உள்ளது. சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தில் ரூ.2 கோடி ரூபாய் இருப்பு உள்ளது. இதில் 80 லட்சம் ரூபாய் உறுப்பினர்களுக்கு கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சங்கத்தில் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வினர் முறைகேடாக நடந்ததை கண்டித்து இந்த உப்பளப் பகுதியில் உப்பு ஏற்றுமதி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உப்பு ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால் வெளியூரிலிருந்து வந்த அனைத்து லாரிகளும் சாலை ஒரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் வேலை நிறுத்தத்தால் லாரி ஓட்டுநர்களும், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் உப்பளப் பகுதியில் பாக்கெட்டில் உப்பு போடும் பணியும் நிறுத்தப்பட்டது. இந்த வேலை நிறுத்ததால் அகஸ்தியன்பள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கான உப்பள தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

    ×