என் மலர்
நாகப்பட்டினம்
சீர்காழி:
சீர்காழி அடுத்த தைக்கால் கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் நிருபர்களிடம் கூறியதாவது:-
தினந்தோறும் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளிலிருந்து 1லட்சம் லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டுமே மணல் அள்ளவேண்டும். மீதமுள்ள மாதங்களில் மணல் அள்ளுவதை தடை செய்யவேண்டும். கர்நாடக மாநிலத்திலிருந்து நமக்கு வரவேண்டிய தண்ணீர் பிரச்சினை போல் நமக்கு அடுத்த பிரச்சினையாக இருப்பது மணல் கொள்ளை. நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தரவேண்டும். மே மாதத்திற்கு 40டிஎம்சி தண்ணீரையும், ஜூன் மாதத்திற்கு 45டிஎம்சி தண்ணீரையும் வழங்கவேண்டும். இதற்கு மணல்குவாரி தடையாக இருந்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவேண்டும். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகட்டவேண்டும். வருடந்தோறும் 2 அல்லது 3லட்சம் கனஅடி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் முக்கொம்பு என்ற இடத்தில் இணைப்பதன் மூலம் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் பஞ்சம் வராது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் வலுப்பெற்று வரும் நிலையில், நிர்மலாதேவி பிரச்னையை வைத்து காவிரி பிரச்சினையை மூடி மறைக்கும் முயற்சி நடைபெறுகிறது. பா.ஜ.க.வின் எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோரை ஒதுக்கி வைத்துவிட்டு காவிரி நீர் பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரழந்தூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 31). காரைக்காலை சேர்ந்தவர் ராஜலட்சுமி (28). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் வரதட்சணை கேட்டு செந்தில், அவரது தாய் மற்றும் சகோதரிகள் 3 பேர் தன்னை துன்புறுத்தியதாக ராஜலட்சுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி (53) கடந்த 10-ந் தேதி விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செந்தில் மற்றும் அவரது தாய் மற்றும் சகோதரிகள் 3 பேர் என 5 பேர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்திலின் அண்ணன் குகன், இன்ஸ்பெக்டர் ராணியை சந்தித்து பேசினார்.
அப்போது வழக்கு தொடர்பாக 5 பேரையும் கைது செய்யாமல் காலம் கடத்துவதற்கும், மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் இன்ஸ்பெக்டர் ராணி தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என குகனிடம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குகன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை நேற்று மதியம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ராணியிடம் குகன் கொடுத்தார்.
அப்போது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பணத்துடன் இன்ஸ்பெக்டர் ராணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.
பாரத பிரதமரின் உஜ்வலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற குடும்பங்களுக்கு அடுப்புடன் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி பி.வி.பாரதி எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது.
சீர்காழி தாசில்தார் பாலமுருகன், முன்னிலை வகித்தார். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி பங்கேற்று 128 பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு, ரெகுலேட்டர் ஆகியவற்றுடன் கூடிய கியாஸ் இணைப்பை வழங்கி பேசுகையில், மத்தியஅரசு கிராமப்புற வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள் பாதுகாப்பாக கியாஸ் அடுப்பை பயன்படுத்தி, மாசு இல்லா நிலையை ஏற்படுத்தவேண்டும் என்றார். அ.தி.மு.க. நகர செயலாளர் பக்கிரிசாமி, ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, மாவட்ட பேரவை செயலாளர் கே.எம்.நற்குணன், பேரூர் செயலாளர் போகர்.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இன்டேன் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் உதயக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். முன்னதாக பாதுகாப்பாக கியாஸ் அடுப்பினை உபயோகிப்பது குறித்தும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் செயல்முறை விளக்கத்தினை சீர்காழி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் செய்து காட்சினார். #tamilnews
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மயிலாடுதுறையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேராசிரியை நிர்மலா தேவி தனிப்பட்ட முறையில் தவறு செய்ய வாய்ப்பு இல்லை. அவரது பின்னணியில் மிகப்பெரிய கும்பல் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது. ஏனென்றால் நிர்மலாதேவி, தொடர்ந்து மாணவிகளிடம் தைரியமாக பேசி உள்ளார்.
நிர்மலாதேவி விவகாரம் குறித்து கவர்னர், தனிநபர் ஆணையம் அமைத்துள்ளார். தமிழக அரசும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் யார் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதில் குழப்பம் உள்ளது. இதில் சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.

பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய கவர்னரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் எச்.ராஜா அநாகரீகமாக தொடர்ந்து பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
காஷ்மீரில் சிறுமி ஆசிபா கொலையை கண்டித்து சென்னையில் வருகிற 21-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில் காந்தி மகான்தெரு, சிவன்கோவில் தெரு, உழவன்தெரு, சுனாமி குடியிருப்பு, சங்கிளிபுரம் ஆகிய 5 பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று அந்த பகுதியில் தனியாக சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுடுகாடு, பரவை ஆற்றின் மறுகரையில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்து போனால் இந்த ஆற்றை கடந்து தான் சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் ½ கிலோமீட்டர் தூரம் உள்ள பரவை ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் கடந்து சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த காந்திமதி என்பவர் உயிரிழந்தார். அதைதொடர்ந்து அவரது இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது அந்த பகுதி மக்கள் காந்திமதியின் உடலை, பரவை ஆற்றின் தண்ணீரில் இறங்கி சென்று தான் அடக்கம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கான சுடுகாடு ஆற்றின் மறுகரையில் தான் உள்ளது. சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் எங்கள் பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களின் உடலை ஆற்றுக்குள் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து பல முறை மனு அளித்துள்ளோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட்(45). விவசாயி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தம்பி ஆரோக்கியதாசின் திருமணத்திற்காக தனக்கு சொந்தமான நிலத்தை வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் வின்சென்ட் தனது நிலத்தை மீட்டுக் கொடுக்குமாறு பலமுறை கேட்டும் ஆரோக்கியதாஸ் மீட்டு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் போலீசில் வின்சென்ட் புகார் செய்தார். ஆனால் இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த வின்சென்ட் இன்று காலை எலந்தங்குடியில் உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுபற்றி அறிந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெங்கடேசன், பெரம்பூர் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடம் சென்று வின்சென்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டனர். பின்னர் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கீழ்வேளூர்:
நாகை சொக்க நாதர் கோவில் தெருவில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் ரோட்டு ஓரத்தில் ஒரு விநாயகர் கோவில் கட்டி வழிப்பட்டு வருகின்றனர். இக்கோவில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி நெடுஞ்சாலைத்துறையினர் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.
இந்தநிலையில் ரோட்டு ஓரம் உள்ள விநாயகர் கோவிலில் காம்பவுண்டு சுவர் அமைத்துள்ளனர். இதுபற்றி புகார் எழுந்ததால் நாகை தாசில்தார் ராகவன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று காலை சம்பவ இடம் சென்று விநாயகர் கோவில் காம்பவுண்டு சுவரை இடித்து அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவில் காம்பவுண்டு சுவர் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் ஏராளமானோர் நாகை - நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை வெளிப்பாளையம் போலீசார் சம்பவம் இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டக்காரர்களை கலைந்து செல்ல வைத்தனர்.
சீர்காழி:
சிதம்பரத்தில் இருந்து இன்று காலை சீர்காழி நோக்கி தனியார் பஸ் ஒன்று வழக்கம்போல் வந்து கொண்டிருந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ்சை சிதம்பரம் மணக்குடி பகுதியை சேர்ந்த டிரைவர் ஜெகன்(26) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று காலை 9 மணியளவில் தனியார் பஸ் சீர்காழி அருகே தைக்கால் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது சீர்காழியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த லாரியும், தனியார் பஸ்சும் எதிர்பாராமல் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தால் அலறி துடித்தனர். இந்த விபத்தில் லாரி மேலும் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீதும் மோதி நின்றது.
பயங்கர சத்தத்துடன் பஸ்-லாரி மோதிக் கொண்டதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஓடிவந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
விபத்து பற்றி தகவலறிந்து கொள்ளிடம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த சிதம்பரத்தை சேர்ந்த சாதிக்பாட்சா(வயது40), அதே பகுதி கருணாகரன்(45), அட்சயவர்த்தினி, பஸ் டிரைவர் ஜெகன்(26), வல்லம்படுகையை சேர்ந்த கவிதா(35), சீர்காழி தென்பாதி ஜீவிதா மற்றும் கண்டக்டர் உள்பட 22 பேர் காயமடைந்தனர்.
இவர்களில் 18 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நாகப்பன் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மனிஷா(8) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 2-வது மகள் சுபிக்ஷா(1½).
மனிஷா தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வரவது வழக்கம்.
இன்று காலையும் மனிஷாவை அழைத்து செல்ல நாகப்பன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு பள்ளி வேன் வந்தது. கார்த்திகேயன் வேனில் மனிஷாவை வேனில் ஏற்றிவிட்டார்.
அப்போது வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுபிக்ஷா, அக்கா பள்ளிக்கு செல்வதை கண்டு ஓடிவந்து வேனில் பக்கவாட்டில் சக்கரத்துக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.
இதை வேன் டிரைவர், கார்த்திகேயன் ஆகியோர் கவனிக்கவில்லையாம்.
இந்த நிலையில் பள்ளி டிரைவர் , வேனை ஓட்டி செல்ல கிளம்பினார். அப்போது வேன் சக்கரம் அருகே நின்றிருந்த சிறுமி சுபிக்ஷா மீது சக்கரம் ஏறியது. இதில் சக்கரத்தின் அடியில் சிக்கிய குழந்தை சுபிக்ஷா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தாள். இதைக்கண்ட அவரது பெற்றோர் மற்றும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அலறி துடித்தனர்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொறையார் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பொறையார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி சென்ற அக்காவை காண ஓடிவந்த குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
வேதாரண்யம்:
கோடைக்காலம் துவங்கி கடும் வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. காலையிலேயே வெயிலின் உக்கிரத்தால் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் வேதாரண்யத்தில் கடந்த பல நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டாக பலமணி நேரம் மின்சாரம் அவ்வப் போது தடைபடுகிறது. இதனால் நோயாளிகள், வயதானோர்அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் தேர்விற்கு படிக்கும் மாணவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் பலமணி நேரம் மின்தடை நிலவுகிறது. இதனால் தேர்விற்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அங்குள்ள தொலைபேசி இயங்குவதில்லை. மீண்டும் மின்சாரம் வந்தபிறகுதான் தொடர்பு கொள்ள முடிகிறது. அடிக்கடி மின்தடை ஏற்படுவது குறித்து சரியான காரணமும் அறிவிப்பதில்லை.
எனவே வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் தடையின்றி கிடைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தேசிய கொடி கிழிந்த நிலையில் அரை கம்பத்தில் பறந்தது.
தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்ததை இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி கலெக்டர் அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து உஷாரான அலுவலர்கள் உடனே கலெக்டர் அலுவலகத்தின் மேல்மாடிக்கு சென்று கிழிந்த கொடியை இறங்கி விட்டு புதிய தேசிய கொடியை பறக்க விட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் நிலவிய பரபரப்பு அடங்கியது.
பிரதமர் மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் கருப்பு கொடியை வீடு- கடைகளில் பறக்கவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் தேசிய கொடி கிழிந்த நிலையில் பறந்ததால் யாராவது திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டார்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகையில் தொடங்கினார்.
பின்னர் இரவில் மயிலாடுதுறை சென்று வைத்தீஸ்வரன் கோவிலில் மு.க.ஸ்டாலின் தங்கினார்.
அப்போது அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சீர்காழி போலீஸ் டி.எஸ்.பி. சேகர் சென்றார். அங்கு அவர் ஸ்டாலினை சந்தித்து , காவிரி உரிமை மீட்பு பயணத்தை இன்றுடன் நிறுத்தி கொள்ளுமாறு சம்மன் கொடுத்தார். ஆனால் அதை வாங்க ஸ்டாலின் மறுத்து விட்டார்.
நாளை காலை திட்டமிட்டப்படி கடலூரில் இருந்து 1000 வாகனங்களுடன் பேரணியாக செல்வோம் என்று தெரிவித்தார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து கருப்பு சட்டை அணிந்தப்படி மு.க.ஸ்டாலின் காவிரி உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்கினார். #CauveryIssue #CauveryMangementBoard






