என் மலர்
செய்திகள்

வரதட்சணை வழக்கில் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
வரதட்சணை வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தேரழந்தூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 31). காரைக்காலை சேர்ந்தவர் ராஜலட்சுமி (28). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது 3 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் வரதட்சணை கேட்டு செந்தில், அவரது தாய் மற்றும் சகோதரிகள் 3 பேர் தன்னை துன்புறுத்தியதாக ராஜலட்சுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி (53) கடந்த 10-ந் தேதி விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து செந்தில் மற்றும் அவரது தாய் மற்றும் சகோதரிகள் 3 பேர் என 5 பேர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்திலின் அண்ணன் குகன், இன்ஸ்பெக்டர் ராணியை சந்தித்து பேசினார்.
அப்போது வழக்கு தொடர்பாக 5 பேரையும் கைது செய்யாமல் காலம் கடத்துவதற்கும், மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் இன்ஸ்பெக்டர் ராணி தனக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என குகனிடம் கேட்டார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத குகன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.30 ஆயிரத்தை நேற்று மதியம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் ராணியிடம் குகன் கொடுத்தார்.
அப்போது பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், பணத்துடன் இன்ஸ்பெக்டர் ராணியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.

Next Story