search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்  மாற்றுத்திறனாளிகளுக்கான  சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
    X

    தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    • குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தருமபுரி சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி சப்-கலெக்டர் தலைமையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வருகின்ற 2.8.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

    தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துக்கொண்டு பயன்பெறலாம்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்திவருகிறது.

    அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசின் நல திட்டங்களை பெற்று பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதம் முதல் செவ்வாய் கிழமை தருமபுரி சார் ஆட்சியர் தலைமையில் தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்திலும், அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அரூர் வருவாய் கோட்டத்திலும் மேலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட கலெக்டர் தலைமையிலும் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

    எனவே தருமபுரி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 2.8.2022 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தருமபுரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தருமபுரி சப்-கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளி கள் கலந்துக்கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×