search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ரெயில் நிலையத்தில் மருத்துவ முகாம்
    X

    முகாமில் பயனாளிகளுக்கு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருதுதுரை பரிசோதனை செய்தார்.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் மருத்துவ முகாம்

    • மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • ரெயில்வே ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையத்தில் இன்று தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் ரெயில்வே மெயில் சர்வீஸ் மற்றும் கேன்சர் சென்டர் இணைந்து நடத்திய மருத்துவ முகாமை தஞ்சை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தொடக்கி வைத்தார். ரெயில்வே அஞ்சலக மெயில் சர்வீஸ் ஆவணக்காப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். கேன்சர் சென்டர் நிர்வாக அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.

    இந்த முகாமில் இருதய பாதிப்பு , மூளை தண்டு வட பாதிப்பு, மார்பு நோய், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட நோய்களுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் அவர் பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்தார்.

    இந்த முகாமில் தஞ்சாவூர் ரெயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பல்துறை சிறப்பு மருத்துவர்கள் முனியசாமி , டீனா, அனுசுயா, ஜீவானந்தம், மணிவண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    Next Story
    ×