search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    X

    மகாத்மா காந்தியடிகள் அரையாடை புரட்சி செய்த 100-வது ஆண்டையொட்டி மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அருகில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணன், வெற்றிவேல் உள்ளனர்.

    காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    • தமிழகம் முழுவதும் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்தார்.
    • அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    மதுரை

    மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி நடத்தி 100 ஆண்டுகளான நிலையில் காந்தி அருங்காட்சியக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    பின்னர் காந்தியடிகள் அஸ்தி வைக்கப்பட்ட இடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்து தியாகிகளுக்கு மரியாதை செய்து ராட்டையில் நூல் நூற்றார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரைக்கு என தனித்துவமான பாரம்பரியம், பண்பாடுகள் உள்ளது. மதுரையில் காந்தியடிகள் அரை ஆடை புரட்சி செய்தார். அவர் அரை ஆடை புரட்சி நடைபெற்று 100 ஆண்டுகள் கடந்துள்ளது. அரை ஆடை புரட்சி என்பது உலக புரட்சியாக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

    தி.மு.க. எம்.பி.ஆ.ராசா சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. ஆ.ராசாவின் கருத்து ஒட்டுமொத்த தி.மு.க.வின் கருத்தாக தான் பார்க்க வேண்டும்.

    எல்லா மதங்களும் அறநெறியை மட்டுமே போதனை செய்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆ.ராசாவை கண்டிக்கவில்லை என்றால் தி.மு.க.வினர் அதற்குரிய தண்டனையை பெறுவார்கள்.

    தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு உள்ளது. மருந்து தட்டுப்பாட்டை நீக்கி காய்ச்சலை குறைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×