search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தூர் அருகே 3 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஏரி:  சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி கொண்டாடிய மக்கள்
    X

    கடத்தூர் அருகே 3 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பிய ஏரி: சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி கொண்டாடிய மக்கள்

    • ஏரி கடந்த 3-ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.
    • ஏரி பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட நல்ல குட்டலஅள்ளி கிராமப் பகுதியில் உள்ள ஏரி கடந்த 3-ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர். அவர்கள் ஏரி பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டனர்.

    பொதியம்பள்ளம் தடுப்பணை பகுதியில் இருந்து இந்த ஏரி பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழையில்லாத நிலை இருந்தது.

    கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த ஏரி நிரம்பியது.

    இந்த ஏரியில் இருந்து வெளியேரும் தண்ணீர் கடத்தூர், மடதஅள்ளி, புதூர், வேடியூர், கோடியூர், போசி நாயக்கன்பட்டி ஏரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×