search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரம்பிய ஏரி"

    • ஏரி கடந்த 3-ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர்.
    • ஏரி பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட நல்ல குட்டலஅள்ளி கிராமப் பகுதியில் உள்ள ஏரி கடந்த 3-ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்சியடைந்தனர். அவர்கள் ஏரி பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து கிடா வெட்டி வழிபட்டனர்.

    பொதியம்பள்ளம் தடுப்பணை பகுதியில் இருந்து இந்த ஏரி பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    அங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழையில்லாத நிலை இருந்தது.

    கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த ஏரி நிரம்பியது.

    இந்த ஏரியில் இருந்து வெளியேரும் தண்ணீர் கடத்தூர், மடதஅள்ளி, புதூர், வேடியூர், கோடியூர், போசி நாயக்கன்பட்டி ஏரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் ஆடு வெட்டி சிறப்பு பூஜை
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாயனத்தியூர் ஏரி சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றுப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கிறது. இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை விவசாயம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனர்.

    ஆனால் கடந்த 20 வருடங்களாக இந்த ஏரி நிரம்பாததால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சிலர் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்கின்றனர்.

    குறிப்பாக தண்ணீர் இல்லாததால் இந்த பகுதியில் விவசாயம் போதுமானதாக வளர்ச்சி பெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டும் தற்போது சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் ஏரி பாதி அளவிற்கு நிரம்பியது கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இந்த ஏரியானது நேற்று முழு கொள்ளளவை எட்டி 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி கோடி போனது.

    இதனால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அனைவரும் ஒன்று கூடி கோடி போன பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியின் அம்மணாங்கோயில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரஜினிகாந்த் தலைமையில் புதுப்பேட்டை கூட்டுறவு சங்க இயக்குனர் ஆனந்தன் மற்றும் ஆறுமுகம் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கிராம மக்கள் மலர் தூவி வழிபாடு
    • சிறப்பு பூஜைகள் நடத்தினர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பாச்சல் ஊராட்சி, பகுதியில் சலவன் ஏரி உள்ளது. இந்த ஏரி நிரம்பினால் சுற்றுப்பகுதியில் உள்ள பல கிராமங்களுக்கு விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கும்.

    இதனால் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் உணவுப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை விவசாயம் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வந்தனர். ஆனால் கடந்த 40 வருடங்களாக இங்குள்ள ஏரி நிரம்பாததால் ஒரு சில விவசாயிகள் மட்டுமே ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேலும் சிலர் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டு கூலி வேலைக்கு செல்கின்றனர். குறிப்பாக தண்ணீர் இல்லாததால் இந்த பகுதியில் விவசாயம் போதுமானதாக வளர்ச்சி பெறாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த ஆண்டும் தற்போது சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் இங்குள்ள ஏரி பாதி அளவிற்கு நிரம்பியது. இதனால் இங்குள்ள பொது மக்களுக்கு போதுமான குடிநீர் பிரச்சனை இல்லாமல் போனது.

    மேலும் தற்போது சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் இந்த ஏரியானது நேற்று முழு கொள்ளளவை எட்டியது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி கோடி போனது.

    இதனால் ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து அனைவரும் ஒன்று கூடி கோடி விட்ட பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்து, கிடா வெட்டி, மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது ஒன்றிய கவுன்சிலர் ஆர். மணிகண்டன், ஊர் கவுண்டர் குங்குமம் ஜி.குமரேசன், துணைத் தலைவர் எம் சஞ்சீவி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அப்பகுதி மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×